search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை
    X

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை

    • கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி துறை அவசர நிலை ஒத்திகை நடைபெற்றது.
    • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பாதுகாப்பாக பரபரப்புடன் வெளியில் அனுப்பினர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், புதியதாக கட்டி மின் உற்பத்திக்கு தயாராக இருக்கும் பாவினி அதிவேக அணுஉலை, பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்ற பிரிவுகள் இந்திய ராணுவம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு கட்டுப்பாட்டில் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் ஏதேனும் அணுக்கசிவு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அங்கு பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியர்களும் எப்படி வெளியேற வேண்டும் என்பது குறித்த ஒத்திகை மற்றும் அதற்கான பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வளாகத்தில் நடைபெறும்.

    இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி துறை அவசர நிலை ஒத்திகை நடைபெற்றது. முதலில் அவசர ஒலி எழுப்பப்பட்டது. பணி நேரம் முடிவதற்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பாதுகாப்பாக பரபரப்புடன் வெளியில் அனுப்பினர். இதை பார்த்த சதுரங்கபட்டினம், வெங்கம்பாக்கம் பகுதி மக்கள் பதட்டம் அடைந்தனர். பின்னர் இது ஒத்திகை என்பது தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.

    Next Story
    ×