search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளி கொலை"

    தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பேட்ரிக் சர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் மகாராஜன் (வயது 20), கட்டிட தொழிலாளி. இவரும், முத்துலட்சுமி என்பவரும் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இரவு நேரங்களில் மகாராஜன் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதியில் மகாராஜன் கத்திக்குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாராஜன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மகாராஜன் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.

    அந்த சமயத்தில் அங்கு தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த கிராஸ்வின், புதுத்தெருவை சேர்ந்த கிளிப்டன் உள்ளிட்ட 4 பேர் வந்தனர். அப்போது, மகாராஜனுக்கும், கிராஸ்வின் உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் நேற்று முன்தினம் இரவு மகாராஜனை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராஸ்வின், கிளிப்டன் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கட்டிட தொழிலாளி மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 43). கட்டிட தொழிலாளி.

    கடலூர் கோண்டூரை சேர்ந்த தங்கமணி என்பவருக்கு நெல்லிகுப்பம் அடுத்த தோட்டப்பட்டு காலனியில் புதியதாக தொகுப்பு வீடு கட்டப்பட்டது. தற்போது அந்த தொகுப்பு வீட்டின் மாடியில் புதிதாக ஒரு அறை கட்டப்பட்டு வந்தது. இந்த பணியில் குணசேகர் உள்பட 4 பேர் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று அவர்களில் ஒருவர் வேலை முடியும் முன்பே வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து வேலை முடிந்ததும் இரவு அந்த வீட்டின் கீழ்பகுதியில் அமர்ந்து குணசேகர் உள்பட 3 பேர் மது குடித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வீட்டில் குணசேகர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குணசேகரின் உடலை கைப்பற்றி பார்வையிட்டனர்.

    அப்போது அவரது தலையில் மண்வெட்டியால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இதில் குணசேகர் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு ரத்தக் கறையுடன் கிடந்த மண் வெட்டியை போலீசார் கைப்பற்றினர்.

    மோப்ப நாய் அர்ஜூன் அங்கு வரழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரபுரம் வரை ஓடி நின்றது.

    குணசேகருடன் மது அருந்தியவர்கள் அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்தனரா? அல்லது வேறு யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே குணசேகரன் கொலை தொடர்பாக அவருடன் மது அருந்திய ஒரு வாலிபர் சேத்தியாத்தோப்பு அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் அவரை பிடித்தனர். அந்த வாலிபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மார்த்தாண்டம் அருகே நண்பனின் மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கட்டிடத் தொழிலாளியை கொலை செய்தோம் என்று கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ் (வயது 48). கட்டிடத் தொழிலாளி. மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்தார்.

    கடந்த 17-ந் தேதி ஸ்டான்லி ஜோன்ஸ் குழித்துறை மேற்கு ரெயில் நிலையம் அருகே உள்ள ரப்பர் தோட்டத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மேலும் அவர் அரை நிர்வாண நிலையிலும் காணப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

    ஸ்டான்லி ஜோன்ஸ் கொலையில் அவரது நண்பர்களான குழித்துறை பாளையங் கெட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர் (35), மார்த்தாண்டம் மதிலகம் பகுதியைச் சேர்ந்த அருள் (34), கழுவன்திட்டையைச் சேர்ந்த சதீஷ் (38) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    போலீசார் தேடியபோது அவர்களின் செல்போன் சிக்னல் ஆரல்வாய்மொழி பகுதியை காட்டியது. அங்கு செங்கல் சூளை ஒன்றில் பதுங்கி இருந்த 3 பேரையும் நேற்று போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    இவர்களில் சுந்தர் தான் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். அவர் தான் மற்ற 2 பேரையும் கூட்டு சேர்த்து ஸ்டான்லி ஜோன்சை கொலை செய்தது தெரியவந்தது.

    சுந்தர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டான்லி ஜோன்ஸ் எனது நெருங்கிய நண்பர் ஆவார். நாங்கள் 2 பேரும் சேர்ந்து வேலைக்கு செல்வோம், இரவில் ஒன்றாக அமர்ந்து மது குடிப்போம். இந்த பழக்கத்தில் அவர் எனது வீடு வரை வந்து சென்றார்.

    அப்போது எனது மனைவியுடனும் அவர் பழகினார். அவளது அழகில் மயங்கிய ஸ்டான்லி ஜோன்ஸ் அவளை அடையத் துடித்தார். மேலும் எனது மனைவியின் செல்போனுக்கு அடிக்கடி பேசி உல்லாசத்துக்கும் அழைத்தார். ஒருமுறை மது குடித்து கொண்டு இருந்தபோது உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை என்று கூறி என்னிடமே கேட்டு விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரிடம் தகராறு செய்தேன்.

    இப்படி எனது மனைவிக்கு அவர் அளித்த செக்ஸ் தொல்லைகள் அதிகரிக்கவே ஸ்டான்லி ஜோன்சை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக சதீஷ், அருள் ஆகியோரின் உதவியை நாடினேன். எங்கள் திட்டப்படி கடந்த 16-ந் தேதி இரவு ஸ்டான்லி ஜோன்சை மதுகுடிக்கலாம் என அழைத்துச் சென்றோம்.

    மதுபோதையில் இருந்தபோது அவரை அரிவாளால் வெட்டினோம். எங்களிடம் இருந்து தப்பிக்க அவர் ரப்பர் தோட்டத்துக்குள் ஓடினார். ஆனால் அவரை விடாமல் நாங்கள் வெட்டிக் கொலை செய்தோம். பின்னர் தப்பி ஆரல்வாய்மொழியில் உள்ள செங்கல் சூளையில் பதுங்கிக் கொண்டோம். போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதே தகவலை அருள், சதீஷ் ஆகியோரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    கைதான 3 பேரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

    கட்டிட தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணத்தை கொடுக்காமல் ஏளனம் பேசியதால் கட்டிட தொழிலாளியை கொலை செய்தேன் என்றார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவர் சென்னையில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான லிங்கதுரையிடம் (50) ரூ.1,000 கடன் வாங்கியதாகவும், பின்னர் செந்தில் கடனை திருப்பி கொடுக்காமல், காலம் தாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 18-ந்தேதி செந்தில், பக்கத்து ஊரான சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இரவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பேய்க்குளத்தை அடுத்த பழனியப்பபுரம் பகுதியில் வந்த‌போது லிங்கதுரை மற்றும் அவருடைய உறவினரான ஜெகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து, செந்திலை வழிமறித்து கடனை திருப்பி தருமாறு கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த லிங்கதுரை, ஜெகன் ஆகியோர் உருட்டுக் கட்டையால் செந்திலை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இதுபற்றி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொலையாளிகள் லிங்கதுரை, ஜெகன் ஆகிய 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள‌ காட்டுக்குள் பதுங்கி இருந்த லிங்கதுரையை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான லிங்கதுரை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “செந்தில் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏளனம் பேசிவந்தார். அதனால் அவரை அடித்து கொலை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

    ×