என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building worker killed"

    திருவெறும்பூர் அருகே இன்று கட்டிட தொழிலாளியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையத்தை சேர்ந்தவர் ரதீஷ் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 1 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. 

    இதையடுத்து அவரது உறவினர்கள் ரதீசை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை சந்து பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ரதீஷ் இறந்து கிடந்தார். 

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    ரதீசின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதால் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. 

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் ரதீஷ் இறந்து கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு அவரது வீட்டின் அருகே சென்று நின்றதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

    இதனால் கொலையில் உறவினர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரதீசுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குழித்துறை ரெயில்நிலையம் அருகே கட்டிடத் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குழித்துறை:

    குழித்துறை அருகே உள்ள தேனாம்பாறை வண்ணாவிளையைச் சேர்ந்தவர் ஸ்டேன்லி ஜோன்ஸ் (வயது 45). கட்டிடத் தொழிலாளி.  நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜோன்ஸ் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. சில நேரங்களில் வெளியே சென்றால் காலையில் தான் அவர் திரும்பி வருவார். அதேபோல் நினைத்து அவரது குடும்பத்தினர் ஸ்டேன்லி ஜோன்சை தேடாமல் இருந்தனர். 

    இந்தநிலையில் இன்று காலை ஜோன்ஸ்,  ஞாறான்விளை பக்கம் உள்ள குழித்துறை மேற்கு ரெயில்நிலையம் அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது. மேலும் உடலில் பல இடங்களில் அரிவாள்வெட்டு காயங்களும் இருந்தன. ஜோன்ஸ் சட்டை மற்றும் உள்ளாடை மட்டுமே அணிந்து அரைநிர்வாண நிலையில் கிடந்தார். 

    காலையில் ரெயில் நிலையம் சென்ற பொதுமக்கள் ஜோன்ஸ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தக்கலை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜோன்சின் பிணத்தை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
    கொலை செய்யப்பட்ட ஜோன்சுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவரை யாராவது கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

    ஜோன்ஸ் அரைநிர்வாண நிலையில் கிடப்பதால் அவரை ஒன்றுக்கும் மேற்பட்ட கும்பல் விரட்டி சிறிது தூரம் ஓடியநிலையில் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்து இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஜோன்சுடன் மதுகுடிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. அவர்களை பிடித்து விசாரித்தால் கொலைக்கான காரணம் தெரியும் என கூறப்படுகிறது. ஜோன்ஸ் கொலைக்கு குடிபோதை தகராறு தான் காரணமா? அல்லது வேறு எதுவும் பிரச்சினை உண்டா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது. 

    கொலை செய்யப்பட்ட ஜோன்சுக்கு கிறிஸ்டல் பாய் (45) என்ற மனைவியும், மதன்சுபின் (21) என்ற மகனும், சுமிதா (19) என்ற மகளும் உள்ளனர். அவர்கள் ஜோன்சின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 
    கட்டிட தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணத்தை கொடுக்காமல் ஏளனம் பேசியதால் கட்டிட தொழிலாளியை கொலை செய்தேன் என்றார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவர் சென்னையில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான லிங்கதுரையிடம் (50) ரூ.1,000 கடன் வாங்கியதாகவும், பின்னர் செந்தில் கடனை திருப்பி கொடுக்காமல், காலம் தாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 18-ந்தேதி செந்தில், பக்கத்து ஊரான சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இரவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பேய்க்குளத்தை அடுத்த பழனியப்பபுரம் பகுதியில் வந்த‌போது லிங்கதுரை மற்றும் அவருடைய உறவினரான ஜெகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து, செந்திலை வழிமறித்து கடனை திருப்பி தருமாறு கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த லிங்கதுரை, ஜெகன் ஆகியோர் உருட்டுக் கட்டையால் செந்திலை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இதுபற்றி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொலையாளிகள் லிங்கதுரை, ஜெகன் ஆகிய 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள‌ காட்டுக்குள் பதுங்கி இருந்த லிங்கதுரையை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான லிங்கதுரை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “செந்தில் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏளனம் பேசிவந்தார். அதனால் அவரை அடித்து கொலை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

    ×