என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளி கொலை: கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி:
தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பேட்ரிக் சர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் மகாராஜன் (வயது 20), கட்டிட தொழிலாளி. இவரும், முத்துலட்சுமி என்பவரும் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இரவு நேரங்களில் மகாராஜன் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதியில் மகாராஜன் கத்திக்குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாராஜன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மகாராஜன் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த கிராஸ்வின், புதுத்தெருவை சேர்ந்த கிளிப்டன் உள்ளிட்ட 4 பேர் வந்தனர். அப்போது, மகாராஜனுக்கும், கிராஸ்வின் உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் நேற்று முன்தினம் இரவு மகாராஜனை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராஸ்வின், கிளிப்டன் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.