என் மலர்
நீங்கள் தேடியது "building worker murder"
மதுரை:
மதுரை ஊமச்சிகுளம்- அலங்காநல்லூர் மெயின் ரோட்டில் வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போ
இதையடுத்து ஊமச்சிகுளம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியனது.
படுகொலை செய்யப்பட்ட வாலிபர் ஊமச்சிகுளம் அருகே உள்ள திருமால்புரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜரத்னம் என்று தெரியவந்தது.
ராஜரத்னத்துக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் திருவண்ணாமலையில் குடியிருந்து வருகின்றனர்.
எனவே ராஜரத்னம் சக தொழிலாளியான வீரபாண்டி சரவணன் என்பவருடன் திருமால் புரத்தில் தங்கி கட்டிட வேலை பார்த்தார்.
ராஜரத்னம் நேற்று தொழில் விஷயமாக வீரபாண்டி சென்று உள்ளார். இந்த நிலையில் அவரின் உடல் அரிவாள் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளது.
கொலை குறித்து போலீசார் கூறும்போது, ராஜரத்னத்தின் இடுப்பு, தலையில் அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது. அவரை கொன்றது யார்? என்று தெரியவில்லை. ராஜரத்னத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. எனவே அவரை யாராவது குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் வெட்டிக் கொன்றனரா? என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார். கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பேட்ரிக் சர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் மகாராஜன் (வயது 20), கட்டிட தொழிலாளி. இவரும், முத்துலட்சுமி என்பவரும் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இரவு நேரங்களில் மகாராஜன் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதியில் மகாராஜன் கத்திக்குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாராஜன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மகாராஜன் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த கிராஸ்வின், புதுத்தெருவை சேர்ந்த கிளிப்டன் உள்ளிட்ட 4 பேர் வந்தனர். அப்போது, மகாராஜனுக்கும், கிராஸ்வின் உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் நேற்று முன்தினம் இரவு மகாராஜனை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராஸ்வின், கிளிப்டன் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 43). கட்டிட தொழிலாளி.
கடலூர் கோண்டூரை சேர்ந்த தங்கமணி என்பவருக்கு நெல்லிகுப்பம் அடுத்த தோட்டப்பட்டு காலனியில் புதியதாக தொகுப்பு வீடு கட்டப்பட்டது. தற்போது அந்த தொகுப்பு வீட்டின் மாடியில் புதிதாக ஒரு அறை கட்டப்பட்டு வந்தது. இந்த பணியில் குணசேகர் உள்பட 4 பேர் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று அவர்களில் ஒருவர் வேலை முடியும் முன்பே வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து வேலை முடிந்ததும் இரவு அந்த வீட்டின் கீழ்பகுதியில் அமர்ந்து குணசேகர் உள்பட 3 பேர் மது குடித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த வீட்டில் குணசேகர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குணசேகரின் உடலை கைப்பற்றி பார்வையிட்டனர்.
அப்போது அவரது தலையில் மண்வெட்டியால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இதில் குணசேகர் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு ரத்தக் கறையுடன் கிடந்த மண் வெட்டியை போலீசார் கைப்பற்றினர்.
மோப்ப நாய் அர்ஜூன் அங்கு வரழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரபுரம் வரை ஓடி நின்றது.
குணசேகருடன் மது அருந்தியவர்கள் அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்தனரா? அல்லது வேறு யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே குணசேகரன் கொலை தொடர்பாக அவருடன் மது அருந்திய ஒரு வாலிபர் சேத்தியாத்தோப்பு அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் அவரை பிடித்தனர். அந்த வாலிபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






