search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு கடை"

    • இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம்- தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் சீதாராமன் என்ற மணி கண்டன் (வயது 35). இவர் திருமங்கலம்- மதுரை மெயின் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடை யை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக் கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். கூட்டாளிகள் வெளியில் நின்று கண்காணிக்க ஒருவர் மட்டும் கடையின் மேல்புற ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தார்.

    பின்னர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 2 தங்க நாணயங் களை திருடிக் கொண்டு கூட்டாளிகளுடன் தப்பி னார்.

    மறு நாள் கடையை திறக்க வந்த சீதாராமன் பணம், தங்க நாணயங்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் திருமங் கலம் நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தி னர். அப்போது கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப் பட்டது. அதில் கடைக்குள் மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகி யுள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக் கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது.
    • குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது. கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் ஏராளமான கடைகள் உள்ளது. மேலும் அதிகாலை நேரங்களில் இந்த பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையி ல் நாராயணநாயக்கம்புதூர் பிரிவு மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள பழைய இரும்பு கடைகளில் அதிகாலை நேரத்தில் காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டும் வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பொதுமக்களே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று எச்சரிக்கை செய்தும் அதையும் மீறி அவர்கள் வயர்களை எரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் பாராமு கமாக இருக்கிறா ர்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக அவர்க ளை எச்சரித்து அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீரென கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் கரும்புகை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
    • கடை உரிமையாளர் முத்துப்பாண்டி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மூலக்கழனி கிராமத்தில் முத்துப்பாண்டி (வயது 37), என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் கரும்புகை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். மேலும் தீயில் கடையில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து கடை உரிமையாளர் முத்துப்பாண்டி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது ஏதாவது மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    ×