search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோக்கள் பறிமுதல்"

    • மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு, 

    ஈரோடு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பயணி–களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை சாலை போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த–தாக 5 ஆட்டோக்கள், உரிமம், தகுதி சான்று, காப்புரிமை சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதுபோல ஷேர் ஆட்டோக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்தது, சீருடை இன்றி வாகனத்தை ஓட்டியது போன்ற காரணத்துக்காக, 7 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்ப–ட்டதாக வடடார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தகுதிச்சான்று இல்லாத வாகனம் என 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர்.
    • ஓட்டுனர் உரிமம் இல்லாதவை என்பது போன்ற விதிமீறல்க ளுக்கான சோதனையில் 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி நகரப் பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ மற்றும் சீட் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. தருமபுரி நகர பகுதியில் நகரப் பேருந்துகள் பல பகுதிகளுக்கு குறைவாக இயக்கப்படுவதால் பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், பென்னாகரம் சாலை, திருப்பத்தூர் சாலை, உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் ஆட்டோவையே நம்பி உள்ளனர்.

    ஆட்டோ தொழிலில் அதிக லாபம் இருப்பதால் அரசு துறையை சார்ந்தவர்கள் தனி ஆட்களை வைத்து 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை இயக்கு வருகின்றனர்.

    இந்த ஆட்டோக்களுக்கு பர்மிட், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் ஆகியவை இல்லாமலேயே இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் பொழுது மேலிட அழுத்தத்தின் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைக்கு காவல்துறையினர் தள்ளப்படுகின்றனர்.

    தொடர்ந்து ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றுவது ஓட்டுனரின் இருபக்கமும் பயணிகளை அமர வைத்து பாதுகாப்பற்ற முறையில் ஆட்டோக்களை இயக்கி வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார் வந்தது.

    அதன்படி நேற்று நெசவாளர் காலனி பகுதியில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சின்னசாமி மற்றும் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுநாதான் காமராஜ் உள்ளிட்டோர் சோதனையிட்டனர்.

    அதில் உரிமம் பெறாத ஆட்டோக்கள், அதிக ஆட்களை ஏற்றி சென்றது, தகுதிச்சான்று இல்லாத வாகனம் என 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர்.

    சரியான இருக்கை பொருத்தாதது, காப்பீடு இல்லாதது, போக்கு வரத்து விதிகளை மீறி அதிக ஆட்களை ஏற்றிச் செல்வது, ஓட்டுனர் உரிமம் இல்லாதவை என்பது போன்ற விதிமீறல்க ளுக்கான சோதனையில் 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தற்பொழுது ஆட்டோ ஓட்டுனர்கள் முறையாக ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம், அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும்.

    விதிமுறை மீறி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவது, பாரம் அதிகம் ஏற்றும் ஆட்டோக்கள் மீது கடுமையான நடவடி க்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    • அதிக அளவு பயனிகளை ஏற்றி சென்றதால் நடவடிக்கை
    • போக்குவரத்து போலீசார் வாகன சோதனை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சாலை பாதுகாப்பு கூட்டத்தில் அதிக மாணவ மாணவிகளையும், பொது மக்களையும் ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வாணியம் பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிக அளவு மாணவ, மாணவிகளையும், பொது மக்களையும் ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல உரிய ஆவணங்கள் இன்றி வந்த 7 ஆட்டோக்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம். கே.காளியப்பன் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • ஜெகநாதன், அஜித்குமார், சக்திவேல், முரளி, முருகன் ஆகியோர் விதிமுறை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றி சென்றனர்.
    • இந்த 5 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விதிமுறை களை மீறி அதிக அளவில் பயணிகளை ஆட்டோ க்களில் ஏற்றி செல்கின்றனர். இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்க்கு தொடர்ந்து புகார்கள் வந்ததின் அடிப்படையில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உத்தரவுப்படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, பஸ் நிலையம், சர்க்கரை ஆலை, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.

    அப்போது ஜெகநாதன், அஜித்குமார், சக்திவேல், முரளி, முருகன் ஆகியோர் விதிமுறை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றி சென்றனர்.

    இந்த 5 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை இயக்கி னால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆட்டோ இயக்குவது குறித்து ஆய்வு செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    தருமபுரி நகர் பகுதியில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து தருமபுரி நகர் பகுதியில் போக்குவரத்து போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னசாமி, ரகுநாதன் தலைமையில், போலீசார் ஆட்டோக்களில் சோதனை நடத்தினர்.

    அப்பொழுது போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஆட்களை ஏற்றி செல்வது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆட்டோ இயக்குவது குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோ இயக்கிய 15 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்று போக்குவரத்து காவலர்களிடம் நகலை ஒப்படைத்து விட்டு ஆட்டோக்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    அதே போல் நகர் பகுதியில் உள்ள ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றக்கூடாது. ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோ ஓட்டினாலோ, அதிகப்படியான ஆட்களை ஏற்றி சென்றாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலிசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    • பண்ருட்டியில் போக்குவரத்து விதி மீறிய 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அனைத்து ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி நகரத்தில் ஆட்டோக்கள் அதிக அளவு செல்கின்றன. ஒருசில ஆட்டோ உரிமையாளர்கள் முறையாக ஆவணம் இன்றி ஒட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் ஆகியோரின் அறிவுரையின் படி பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிசந்திரன், போக்குவரத்து ஆய்வாளர் பரமேஸ்வரபத்மநாபன் ஆகியோர் இணைந்து நகரம் முழுவதும் திடீர் ஆய்வு செய்தனர்.

    அதில் எவ்வித ஆவணம் இன்றி ஆட்டோ ஓட்டுதல், உரிமை இல்லாதவை, திருச்சி, கோவை பகுதியிலிருந்து ஆவணமின்றி எடுத்து வந்து பண்ருட்டியில் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுபவர்கள், ஆட்டோ முன் பகுதியில் பயணிகளை உட்கார வைத்து ஓட்ட கூடாது. யூனிபார்ம் அணிய வேண்டும். அனைத்து ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    • சிதம்பரத்தில் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    சிதம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து பஸ்நிலையத்துக்கு பயணிகளிடம் அதிகமான வாடகை வசூல் செய்வதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் 5 ஆட்டோ வாகனங்கள் அதிகமாக வசூல் செய்ததற்காகவும், தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம், காப்புச் சான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்காகவும் அதனை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தினார். இனிவரும் காலங்களில் கோவில் நகரமான சிதம்பரத்துக்கு வருகை தரும் பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

    ×