search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக தொண்டர்கள்"

    • இன்று இரவு 7.30 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமியுடன் ஆன்லைனில் பேசுவதற்கு அ.தி.மு.க.வினர் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 'எக்ஸ்' வலைதளத்தின் மூலமாக எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    அ.தி.மு.க. ஐ.டி.பிரிவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரடியாக சந்திக்கும் வகையிலும் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆன்லைனில் பேசுவதற்கு அ.தி.மு.க.வினர் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள்.

    • மாநாட்டு நுழைவாயிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் கீழே இருவருக்கும் நடுவில் எடப்பாடி பழனிசாமி இருக்குமாறு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.
    • புளிசாதம் எப்போதும் கிடைக்கும் வகையில் பொட்டலமாக தொண்டர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மதுரை வலையங்குளத்தில் முழுவீச்சில் நடைபெற்று 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநாட்டுப் பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணிகள் 5 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டு மேடை மட்டும் 20 அடி நீளம், 100 அடி அகலத்தில் டிஜிட்டல் மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் தலைவர்கள் பேசும்போது, அவர்கள் பேசும் காட்சி நேரலையில் மேடையின் பின்புறம் உள்ள டிஜிட்டல் திரையில் மேடை முன் அமர்ந்திருக்கும் தொண்டர்களுக்குத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டு நுழைவாயிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் கீழே இருவருக்கும் நடுவில் எடப்பாடி பழனிசாமி இருக்குமாறு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பழமையான அரண்மனைத் தோற்றத்துடன் பின்னணியில் மலைக்குன்றுகள் இருப்பது போன்ற முகப்பை திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் அமைத்துள்ளனர். இந்த மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவே மாநாட்டுப் பந்தல் அருகே 35 ஏக்கர் பரப்பளவில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருகை தரும் அ.தி.மு.க. தொண்டர்களின் பசியாற்றும் வகையில், புளிசாதம் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. 10 லட்சம் தொண்டர்களுக்கு வழங்கும் வகையில் உணவு தயார் செய்யப்படுகிறது.

    இதற்காக 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 90 ஆயிரம் கிலோ அரிசி, 30 ஆயிரம் கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள், பலசரக்குப் பொருட்கள் தேவையான அளவுக்கு நேற்று முதல் வந்து இறக்கப்பட்டன. தொண்டர்களுக்கு உணவு பெரிய பாக்கு மட்டை தட்டுகளில் வழங்கப்பட உள்ளது. புளிசாதம், பருப்பு சாதம், ஒரு பொறியல், துவையலும் வழங்கப்படுகிறது.

    இதில், புளிசாதம் எப்போதும் கிடைக்கும் வகையில் பொட்டலமாக தொண்டர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் 4 திசைகளில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் வாகனங்கள் மதுரை விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாகவும், கப்பலூர் டோல்கேட், தோப்பூர் வழியாக விமான நிலையம் செல்லும் சாலை, காரியாபட்டி வழியாக வலையங்குளம் மாநாடு நடக்கும் இடத்துக்கு எளிதாக வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

    • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைவதற்கான கோர்ட்டு தடை விலகிய பிறகும் தொண்டர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • அ.தி.மு.க.வினரோ, அல்லது சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்களே அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொண்டர்கள் இரண்டு பிரிவாக மோதிக்கொண்டனர்.

    பூட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. தலைமை கழகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பொருட்கள் சூரையாடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆட்களும் தலைமை கழகத்தில் புகுந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை திருடிக் கொண்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து தலைமை கழகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

    இதுதொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்டு 20-ந்தேதி வரையில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் யாரும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதன்படி அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் யாரும் செல்லாமலேயே இருந்தனர். அங்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது.

    இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தினுள் இன்று முதல் கட்சி தொண்டர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களது சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் திடீர் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் சேதம் அடைந்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. கட்சியினர் உள்ளே நுழைந்தால் இது தொடர்பான ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்பு ஏற்படும் என்றும், எனவே கட்சியினர் யாரும் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வரவேண்டாம் என்றும் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைவதற்கான கோர்ட்டு தடை விலகிய பிறகும் தொண்டர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் அ.தி.மு.க.வினரோ, அல்லது சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்களே அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை கழகம் மற்றும் இருபுறம் உள்ள சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெறும் நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பும் உள்ளது. அப்போது மீண்டும் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு மோதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் போலீசார் கருத்தில் கொண்டுள்ளனர்.

    இதையடுத்து அ.தி.மு.க.வில் மோதல் விலகி இயல்பு நிலை திரும்பும் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் முடிவு செய்துள்ளது.

    ×