search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் விளாடிமிர் புதின்"

    முதல் முறையாக சந்தித்து பேசிய வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், ரஷிய அதிபர் புதினும் இருநாட்டு உறவை பலப்படுத்த உறுதி பூண்டனர். #PutinKimSummit #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    பனிப்போர் காலத்தில் ரஷியாவை உள்ளடக்கிய கம்யூனிஸ்டு கூட்டமைப்பான, சோவியத் ஒன்றியத்துக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்தது. ராணுவம் மற்றும் வணிக ரீதியில் இந்த நட்புறவு பேணப்பட்டு வந்தது.

    1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைந்துபோனதற்கு பிறகு, முதலாளித்துவ நாடாக உருவெடுத்த ரஷியாவுடன் வடகொரியாவின் வணிக உறவுகள் சுருங்கிப்போயின. அதன்பிறகு வடகொரியா, சீனாவின் பக்கம் சாய்ந்து அதனை தனது முக்கிய கூட்டாளியாக ஆக்கிக்கொண்டது.

    இதற்கிடையில் அதிபர் புதின் தலைமையின் கீழ் பொருளாதார ரீதியில் மீண்டெழுந்த ரஷியா, சோவியத் ஒன்றிய காலத்தில் வடகொரியா வாங்கிய கடன் முழுவதையும் நல்லெண்ண நடவடிக்கையாக தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ரஷியா, வடகொரியா இடையிலான நல்லுறவு மீண்டும் துளிர்த்தது.



    இந்த நிலையில் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், தமக்கும் வலிமையான கூட்டாளிகள் உண்டு என்று காட்டவேண்டிய தேவை வடகொரியாவுக்கு எழுந்தது.

    அதே போல் தென்கொரியா உடனான நட்பின் வாயிலாக கொரிய தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவிடம், கொரிய தீபகற்பத்தில் தனக்கும் செல்வாக்கு உண்டு என்று காட்ட வேண்டிய தேவை ரஷியாவுக்கு இருந்ததாக கருதப்படுகிறது.

    இப்படியான சூழலில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசுவதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ரெயில் மூலம் ரஷியாவுக்கு சென்றார். அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான விலாடிவோஸ்டாக்கில் உள்ள ரூஸ்கை தீவில் நேற்று காலை இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தை மிகவும் இணக்கமாக நடந்தது. இந்த சந்திப்பில் ரஷியா-வடகொரிய உறவை மேம்படுத்த இருதரப்பிலும் உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்துடன் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ரஷியா தன்னால் முடிந்த உதவியை செய்யும் என புதின் உறுதியளித்தார்.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது இந்த சந்திப்பு குறித்து புதின் கூறுகையில், “கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலையை எப்படி சரி செய்வது என்பதையும், தற்போது நடந்துகொண்டிருக்கும் நேர்மறையான செயல்பாடுகளுக்கு ஆதரவாக ரஷியா என்ன செய்ய முடியும் என்பதையும் நாம் புரிந்துகொள்வதற்கு இந்த சந்திப்பு பெரிதும் உதவும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

    அதனை தொடர்ந்து பேசிய கிம் ஜாங் அன் “ஏற்கனவே நீண்ட நட்பும், வரலாறும் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதியானதாக, ஆழமானதாக மாற்றும் ஒரு பயனுள்ள சந்திப்பாக இதை நம்புகிறேன்” என தெரிவித்தார்.

    முன்னதாக, பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பாதியில் நின்றுபோன 6 நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைதான் கொரிய தீபகற்பத்தில் உள்ள அணு ஆயுதப் பிரச்சினையை கையாள்வதற்கு பயனுள்ள வழியாக இருக்கும் என கூறினார். 2003-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை வடகொரியா, தென் கொரியா, சீனா, ஜப்பான், ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.   #PutinKimSummit #VladimirPutin #KimJongUn
    ரஷ்யா வந்துள்ள வடகொரிய தலைவரை சந்தித்து பேசுவதற்காக, அதிபர் புதின் இன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார். #PutinKimSummit #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல் முறையாக இன்று ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது சிறப்பு ரெயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து நேற்று (ரஷியா நேரப்படி சுமார் 11 மணியளவில்) விளாடிவோஸ்டோக் நகரை வந்தடைந்தார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் இன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார். தூர கிழக்கு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.


    மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகொரிய தலைவர் கிம்மை சந்திக்கும் ஆறாவது தலைவர் புதின் ஆவார். இதற்கு முன்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங், அமெரிக்க அதிபர் டிரம்ப், வியட்நாம் அதிபர் நிகுயென் ஆகியோர் கிம்மை சந்தித்துள்ளனர். #PutinKimSummit #VladimirPutin #KimJongUn
    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் 25ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
     
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி தீர்வுகாண 3-வது சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் 25ம் தேதி ரஷியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
     
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    பஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். #AmritsarTrainAccident
    மாஸ்கோ:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் நேற்று இரவு தசரா விழா கோலகமால கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியின் போது, எதிர்ப்பாராதவிதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த விபத்துக்கு  பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் மாநில முதல்மந்திரி அம்ரிந்தர் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident
    ரஷியா நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VladimirPutin
    புதுடெல்லி:

    ரஷியா நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். அவரது வருகையின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    இந்தியாவுக்கு வருகை தரும் புதின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.

    இந்திய பயணத்தை முடிக்கும் முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை புதின் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VladimirPutin
    ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ள நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #VladimirPutin #NewDelhi #PMModi #PresidentRamNathGovind
    புதுடெல்லி:

    இந்தியா ஒரு நடுநிலையான நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளுடனும் நட்பு பாராட்டி வருகிறது. உலக அரங்கில் இருதுருவங்களாக பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுடனும் இந்தியா நட்புடன் உள்ளது.

    இதையடுத்து, சமீபத்தில் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையினால் இந்தியா ரஷ்யா இடையேயான நட்பு பாதிக்கப்படும் சூழல் நிலவியது.

    ஏனெனில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதால், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை இந்தியா மீதும் விதிக்க முடியும். இதையடுத்து, ரஷ்யாவுடனான நட்பை இந்தியா கைவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என்றும், இருநாட்டு நட்பு தொடரும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



    இந்நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #VladimirPutin #NewDelhi #PMModi #PresidentRamNathGovind
    ரஷியாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட புதிய ரக ஸ்னைப்பர் துப்பாக்கியை பயன்படுத்தி, இரண்டாயிரம் அடி தூர இலக்கை துல்லியமாக ரஷ்ய அதிபர் புதின் தாக்கினார். #VladimirPutin #Russia
    மாஸ்கோ:

    மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்த எஸ்.வி.சி.எச். 308 ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    அப்போது 2 ஆயிரம் அடி தூரத்தில் வைக்கப்பட்ட மனித உருவ இலக்கினை குறிதவறாமல் சுட்டார். இதில் ஒரு தோட்டா இலக்கின் தலைப் பகுதியை தாக்கியது.

    ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்தில் பணியாற்றிவர் என்பதும், ஜூடோ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #VladimirPutin #Russia
    ×