search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகை
    X

    ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகை

    ரஷியா நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VladimirPutin
    புதுடெல்லி:

    ரஷியா நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். அவரது வருகையின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    இந்தியாவுக்கு வருகை தரும் புதின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.

    இந்திய பயணத்தை முடிக்கும் முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை புதின் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VladimirPutin
    Next Story
    ×