search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ் மாஸ்க்"

    • கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
    • புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

    கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.

    கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

     அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

     வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.

     அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

    சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.

    கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

    இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

     ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

    கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.

     மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

    • வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி தெரியுமா?
    • வெற்றிலையில் சரும பொலிவுக்கு உதவும் கலவைகள் உள்ளன.

    வெற்றிலையின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து அனைவரும் அறிவோம். ஆனால் வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? வெற்றிலையில் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சேர்மங்கள் நிறைந்துள்ளன. சரும பராமரிப்பில் வெற்றிலையை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை பெறலாம். முகத்தில் தோன்றும் பருக்கள் தொடங்கி, கருத்திட்டுகள், வயதான தோற்றம், சுருக்கம் இவை எல்லாவற்றையும் சரிசெய்யும் ஆற்றல் வெற்றிலையில் உள்ளது.

    பல நேரங்களில் நம் முகம் சில சருமம் பிரச்சனைகளை சந்தித்து வருவது வழக்கம். இதனால் நம் முகத்தின் அழகு பாதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இதற்காக பலர் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இனி அதற்கு அவசியமே இருக்காது. ஏனென்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும் வெற்றிலையை வைத்து ஒரு சூப்பரான வெற்றிலை ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    வெற்றிலை – 5

    தேன் – 3 டீஸ்பூன்

    தயிர் – 1 டீஸ்பூன்

    அரிசி மாவு – 1 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு 5 வெற்றிலையை எடுத்து சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தயிர், 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு, இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து கொள்ளவும்.

    அதன் பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். பின்னர் கற்றாழை ஜெல் இருந்தால் முகத்தில் அப்ளை செய்து, ஜென்டில் மசாஜ் கொடுத்தால் போதும். மேலும் இந்த ஃபேஸ் பேக்கை நாம் பருக்களால் பாதிக்கப்படும் போது, அப்ளை செய்து வந்தால் உடனடியான தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

     சருமத்திற்கு வெற்றிலை தரும் நன்மைகள்

    வெற்றிலையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள் மற்றும் கட்டிகள் சருமத்தில் ஏற்படாமல் தடுக்கின்றன. பருவால் முகம் சிவப்பாக மாறும் பிரச்சனையையும் வெற்றிலை சரிசெய்கிறது.

    ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த வெற்றிலை, வயதான தோற்றத்தை தரும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. வெற்றிலையில் சரும பொலிவுக்கு உதவும் கலவைகள் உள்ளன.

    வெற்றிலையில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

    வெயிலில் சென்றால் திடீரென்று சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் எரியும் உணர்வை சரிசெய்ய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை சருமத்திற்கு ஃபிரஷ் லுக்கை தருகிறது.

    • கெமோமில் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராகும்.
    • அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

    எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் முதுமை பயணத்தின் தொடக்கத்திலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இது இயற்கை என்றாலும் மாறுபட்ட வாழ்க்கை சூழல், உணவு முறை ஆகிய காரணத்தில் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது 30-களின் தொடக்கத்திலேயே தொடங்கிவிடும். 30 வயதில் குறைய தொடங்கும். இந்த நேரத்தில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த வயதில் வரும் பிரச்சனையை எதிர் கொள்வதற்கு சில எளிய ஆலோசனைகளை பார்க்கலாம். சரும வறட்சியை சரிசெய்ய சில டிப்ஸ்கள்.

    * சருமம் என்றும் இளமையுடன் இருக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களை சாப்பிடலாம். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவே சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    * தக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.

    * தரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முகச்சுருக்கம் நீங்கும். இதோடு கற்றாழை ஜெல் சேர்க்காலம்.

     கற்றாழை மிகச் சிறந்தது. இதற்கு ஹீலிங் ப்ராபர்ட்டி அதிகம். கேரட், பீட்ரூட் சாறு தடவி வரலாம். இதோடு கடலை மாவு கலந்து பேஸ்ட்போல செய்து ஃபேஸ் பேக் போடலாம். கடலை மாவு, தயிர் ஒரு சிறந்த தேர்வு. வாரத்தில் இருமுறை இந்த ஃபேஸ் பேக் டிரை பண்ணலாம்.

    * வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி உள்ளட்டவை இருப்பதால் இதை சருமத்தில் தடவினால் செல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

     * ஆர்கன் ஆயில் என்று ஒன்று இருக்கிறது. இதை பயன்படுத்தினாலும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.

    * தயிரில் லாக்டிக் ஆசிட் உள்ளதாலும் வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மஞ்சள் சிறப்பான கிருமி நாசினி. ரோஸ் வாட்டர், வைட்டமின் இ எண்ணெய் உள்ளிட்டவற்றையும் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.

    முகப்பரு மற்றும் எக்சிமாவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-இன்ஃபல்மேட்ரி பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், படிப்படியாக முகப்பரு இருந்ததற்கான அடையாளங்களை குறைக்கும்.

    எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதிலும், புதிய செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். மேலும், சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும். இளமையான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தாலாம்.

    கெமோமில் எண்ணெயை அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராக இருக்கும். முகம் பொலிவாக இருப்பதற்கும் இது உதவுகிறது. கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை குறைக்கவும் இதனை பயன்படுத்தலாம். இதோடு, கெமோமில் டீ குடிப்பதும் உடல்நலனுக்கு நல்லது.

    சருமத்தை ஆரொக்கியத்துடன் பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

    • கருமை நீக்குவதற்கு ஸ்க்ரப் ஒன்றே போதும்.
    • பப்பாளி உடலில் உள்ள நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.

    பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருமை நிறமாக மாறிவிடும். வெயில் காலத்தில் நாம் வெளியே சென்று வந்தாலே போதும் நிறம் கருமையாகிவிடும். கருமை நீக்குவதற்கு ஸ்க்ரப் ஒன்றே போதும். தினமும் வெளியே வெயிலில் சென்று திரும்பும் அனைவருக்கும் இது ஏற்றது. இது போன்ற சூழ்நிலையில் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுக்க வேண்டும். கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

     பப்பாளி:

    உங்கள் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க வேண்டுமா? இதற்கு பப்பாளி ஒன்றே போதும். முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நீங்கும். முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழகாக பராமரிக்க முடியும்.

    பப்பாளி உடலில் உள்ள நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. இதற்கு ஒரு டீஸ்பூன் பப்பாளியின் சதைப்பகுதி மற்றும் ஒரு டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை மிகவும் ஆழமாக சுத்தம் செய்ய உதவி செய்கிறது. இவ்வாறு செய்யும்போது இறந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

     காபி ஸ்க்ரப்:

    பால், தேன், தயிர், எலுமிச்சை, மஞ்சள் அல்லது கற்றாழை போன்ற பொருட்களுடன் காபி பவுடரை ஃபேஸ் பேக் வடிவில் பயன்படுத்தலாம். காபி தூளில் உள்ள காஃபின் நிறமிகளை ஒளிரச் செய்து, உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும். பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு காபித் தூளை பயன்படுத்தலாம்.

    இந்த ஸ்க்ரப் செய்ய காபி தூள் அரை தேக்கரண்டி தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்யுங்கள். இப்போது இந்த ஸ்க்ரப் மூலம் கைகளை சிறிது நேரம் மசாஜ் செய்து, அதன் பிறகு வெற்று நீரில் கைகளை கழுவவும்.

     தயிர் மற்றும் மஞ்சள் பேக்:

    இதற்கு அரை கப் தயிர், அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் தேவை. இதை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

    தயிர், எலுமிச்சை மற்றும் சாதம்:

    முதலில் ஒரு டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் அரிசி தூள் சேர்த்து ஸ்க்ரப் போல் செய்து கைகளில் தடவவும். நன்றாக காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்து, மசாஜ் செய்யவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

    இதிலுள்ள எலுமிச்சை ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. இதனால் கைகள் பளிச்சென்று இருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை வெளியில் சென்று வீடு திரும்பும் போதும் இது போன்று ஏதாவது ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளின் உள்ள கருமை மறைந்து நிறம் மெருகேறும்.

    • மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.
    • ஈரப்பதமூட்டும் பாடி லோஷனையும் பயன்படுத்துங்கள்.

    குளிர்காலங்களில் வறண்ட வானிலை இருக்கும் போது சருமத்தை இளமையாகக் காண்பிக்க உங்கள் சிறந்த நண்பராக மாய்ஸ்சரைசர் இருக்கும். அதேநேரம் இயற்கையான சருமத்திற்கு ஏற்ற எண்ணெய்களை பயன்படுத்தவும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உங்கள் முக அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல் தோல் பராமரிப்பு ஒழுங்குமுறையின் ஒரு கருவியாக மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.

    கூடுதலாக ஹைட்ரேட்டிங் நைட் க்ரீம் மற்றும் கண்களுக்குக் கீழ் சீரம் பயன்படுத்துவது மென்மையான சருமத்தை ஈரப்பதம் இழப்பில் இருந்து திறம்பட பாதுகாக்கும்.

    சூடான குளியல் தவிர்க்கவும்

    ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க அதிகபட்சமாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஷவர் பயன்படுத்தாதீர்கள். சருமத்தை நீண்ட நேரம் அழகாக வைத்திருக்கக்கூடிய ஈரப்பதமூட்டும் பாடி வாஷைத் தேர்வு செய்யவும். குளித்த பிறகு சருமத்தை தேய்ப்பதை விட உலர வைக்கவும். ஈரப்பதமூட்டும் பாடி லோஷனையும் பயன்படுத்துங்கள்.

    இரவில் ஃபேஸ் மாஸ்க் அல்லது க்ரீமை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளவும். குளிர்காலத்தில் தோல் வெடிப்பு கவலை தரும்போது உங்கள் முகம், கழுத்து மற்றும் மார்பிற்கு மேல் ஈரப்பதமூட்டும் நைட் கிரீம் தடவுங்கள்.

     சன்ஸ்கிரீன் பயன்பாடு

    குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பலர் சன்ஸ்கிரீனின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. எனினும் கூட உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீனின் தேவை மாறவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

     கற்றாழை பயன்பாடு

    கற்றாழை இனிமையான பண்புகளைக் கொண்டுள்ளது. இது எரிச்சலூட்டும் சருமத்தை நிவர்த்தி செய்வதற்கான சரியான தேர்வாக அமைகிறது. உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதத்தை வழங்கச் சில துளி தேங்காய் அல்லது வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்ப்பதன் மூலம் அதன் நன்மைகளை அதிகரிக்க செய்யும். இந்தக் கலவையானது உங்கள் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

    • கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது.
    • முதுமை பருவ பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும்.

    கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது. இளம் வயது பெண்களின் தோற்றமும், முதுமை பருவத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும். அந்த அளவுக்கு அவர்களின் முகத்தோற்றம் பிரகாசத்தில் ஜொலிக்கும். முகப்பருக்கள், சுருக்கங்கள் எதுவும் தெரியாத அளவிற்கு நேர்த்தியாக சருமத்தை பராமரிப்பார்கள். செயற்கை அழகுசாதன பொருட்களை நாடாமல் இயற்கை பொருட்களை நாடுவதுதான் அவர்களது அழகின் ரகசியத்திற்கு காரணம்.

    பொதுவாகவே வயது அதிகரிக்கும்போது சரும சுருக்க பிரச்சினை எட்டிப்பார்க்கும். சருமத்திற்கு போதிய கவனம் செலுத்தாதது, ரசாயனங்கள் அதிகம் கலந்த கிரீம்களை பயன்படுத்துவது, போதிய நீர்ச்சத்து, ஊட்டச்சத்து இல்லாதது போன்ற காரணங்களால் இளம் பருவத்திலேயே பலருக்கும் சரும சுருக்கம் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.

    கொரிய பெண்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை. அதற்கு முறையான சரும பராமரிப்பும், இயற்கை அழகு சாதன பொருட்களும்தான் காரணம். சருமத்திற்கு அவர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் என்ன தெரியுமா? முட்டையும், காபி தூளும், தக்காளியும்தான். ஆம்! அவற்றை கொண்டே தங்கள் சருமத்தை பொலிவாக்குகிறார்கள்.

    நன்மைகள்:

    இந்த ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். சரும சுருக்கத்தையும், ஆரம்ப நிலையில் சருமத்தில் தென்படும் நுண்ணிய கோடுகளையும் குறைக்கும். சருமத்தை இளமை பொலிவுடன் தக்கவைக்க துணைபுரியும். சருமத்தில் ஆரம்ப நிலையில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்யும் தன்மை முட்டையின் வெள்ளைக்கருவுக்கு உண்டு. அது சரும துளைக்குள் ஆழமாக சென்று அதில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தை சுத்தம் செய்துவிடும். அந்த ஃபேஸ் மாஸ்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை -1 (வெள்ளைக்கரு மட்டும்)

    காபி தூள் - 1 டீஸ்பூன்

    தக்காளி ஜூஸ் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    * முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வருவது போல் நன்றாக அடித்து கலக்கிக்கொள்ளுங்கள்.

    * அதனுடன் தக்காளி ஜூஸ் மற்றும் காபி தூளை சேர்த்து கிளறுங்கள். முகத்தில் தடவும் பதத்துக்கு தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

    * முகம் துடைக்க பயன்படுத்தும் டவலை வெந்நீரில் முக்கி அதனை நன்றாக பிழிந்து கொள்ளுங்கள்.

    * அந்த டவல் முகத்தில் ஒற்றி எடுக்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அந்த பதத்தில் முகத்தின் அனைத்து பகுதிகளிலும் அழுத்தி எடுங்கள்.

    * பின்பு முட்டை, காபி தூள் பேஸ்டை முகம் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும்.

    * 20 நிமிடங்கள் கழித்த பிறகு நன்கு உலர்ந்திருக்கும். அதனை எடுத்தால் அப்படியே பிரிந்து வந்துவிடும். அதனை மெதுவாக பிரித்தெடுத்துவிட்டு சாதாரண நீரில் முகத்தை கழுவினால் போதுமானது.

    * வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம். அதன் மூலம் சருமத்தில் படர்ந்திருக்கும் அழுக்குகள், மாசுக்களை எளிதாக அப்புறப்படுத்திவிடலாம்.

    • மழைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கிறது.
    • இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

    ஓட்சில் உள்ள சபோனின் எனும் மூலக்கூறு சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இது சருமத்தை மென்மையாகவும், நீரேற்றத்துடனும் வைக்க உதவுவதோடு மழைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கிறது.

    ஓட்சில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து அதில் படித்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. ஓட்சுடன் தயிர், வாழைப்பழம், பால், தேன், எலுமிச்சம் பழச்சாறு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவது குறித்து தெரிந்துகொள்வோம்.

    ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்

    பொடியாக அரைத்த ஒருகப் ஓட்ஸ் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பசை போல தயாரிக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி ௧௦ நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக்கினை வார்த்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வரலாம்.

    ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்

    பொடியாக அரைத்த ஓட்ஸ் ஒரு கப், நன்றாக பழுத்த வாழைப்பழம் இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனுடன் வெதுவெதுப்பான பால் சிறிதளவு சோர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் ஏற்படும் தழும்புகளை குணப்படுத்தும். 'விட்டமின் சி' முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களை அழிக்கும்.

    ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

    2 கப் ஓட்சுடன், ஒரு கப் பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பசை போல தயாரிக்கவும். அதை, முகத்தில் பூசி ௧௫ நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ்பேக்கை வாரத்திற்கு 5 முறை பயன்படுத்தலாம்.

    ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க்

    2 டேபிள் ஸ்பூன் ஓட்சில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அது ஆறிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் ௨ டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த ஃபேஸ்பேக்கை முகம், கை மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    ஓட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க்

    ஒரு டீஸ்பூன் பொடியாக அரைத்த ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசவேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    ×