என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சன்ஸ்கிரீன் லோஷன்"
- சன்ஸ்கிரீன் நம் சருமத்திற்கு மிகவும் முக்கியமாகும்.
- புறஊதாக்கதிர் உங்கள் சருமத்தில் படாமல் ஒரு கவசம் போல பயன்படும்.
சன்ஸ்கிரீன் என்பது சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக்கதிரில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க நாம் பயன்படுத்தும் கிரீமாகும். இது நம் சருமத்தை வெயிலில் இருந்தும் சரும புற்றுநோயில் இருந்தும் பாதுகாக்கும்.
சன்ஸ்கிரீன்கள் ஜெல், லோஷன், கிரீம் போன்றவற்றில் கிடைக்கிறது. சன் ஸ்கிரீன் போடாததால் நம் சருமத்தில் சுருக்கம், கரும்புள்ளி, பிக்மென்டேஷன் போன்றவை வரக்கூடும். எனவே சன்ஸ்கிரீன் நம் சருமத்திற்கு மிகவும் முக்கியமாகும்.
சன்ஸ்கிரீன் இரண்டு வகைப்படும். ஒன்று பிசிக்கல் பிளாக்கர்ஸ், இரண்டாவது கெமிக்கல் அப்சார்ப்பர்ஸ். பிசிக்கல் பிளாக்கர்ஸ் என்றால், நீங்கள் இந்த வகை சன்ஸ்கிரீனை தடவும்போது அதில் பயன்படுத்தியிருக்கும் டைட்டானியம் டை ஆக்ஸைடு அல்லது ஸிங் ஆக்ஸைடு போன்றவை புறஊதாக்கதிர் உங்கள் சருமத்தில் படாமல் ஒரு கவசம் போல பயன்படும்.
இதுவே கெமிக்கல் அப்சாப்பர்ஸ் என்றால், புறஊதாக்கதிர்கள் நம் சருமத்தில் ஊடுருவுவதற்கு முன் இவை அதை உறிஞ்சிக்கொள்ளும். புறஊதாக்கதிர் நம் சருமத்தில் படுவதால், சருமம் வயதாவதற்கும், சரும புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அதை தடுக்க வேண்டுமானால் சன்ஸ்கிரீனை தினமும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.
வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது. சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம், SPF (சன் புரோட்டக்ஷன் பேக்டர்).
சன் புரொட்டக்ஷன் ப்பேக்டர் என்றால், இது எவ்வளவு நேரம் நம் சருமத்தை வெயிலில் இருந்து காக்கும் என்பதாகும். SPF 50 யை வாங்குவதே சிறந்ததாகும். ஏனெனில் இது 98 சதவீத சூரிய ஒளியை தடுக்கிறது. எனினும் SPF 30 பயன்படுத்தலாம் என்று சரும மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது 96.7 சதவீதம் சூரிய ஒளியை தடுக்கும்.
பிஏ என்பது சூரிய ஒளியை தடுக்கும் திறன் கொண்டதை குறிக்கிறது. பிளஸ் அதிகமாக ஆக அதன் திறனும் அதிகமாகும். பிஏ++++ அதிகமாக 95 சதவீதம் வரை புற ஊதாக்கதிரை தடுக்கும்.
சன்ஸ்கீரினை முகத்திற்கு மட்டுமில்லாமல் வெயில் படக்கூடிய இடங்களான கை, கால்கள் என்று எல்லா இடங்களிலும் தடவ வேண்டும்.
சன்ஸ்கிரீனை பெரும்பாலும் வாட்டர் ரெசிஸ்டன்டாக பார்த்து வாங்குவது நல்லது. வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்வது நல்லதாகும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீனை போட மறந்துவிடக்கூடாது.
சன்ஸ்கிரீனின் பயன்கள்
புறஊதா கதிர்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கிறது.
சருமத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
வெயிலை தடுக்கும், சருமத்தை வயதாகாமல் தடுக்கும்.
மெலஸ்மாவை தடுக்கும்.
சூரிய புள்ளிகளை தடுக்கும்.
சருமைத்தை மேம்படுத்தும்.
ஈரப்பதமாகவும், சருமத்தில் ஹைப்பர் பிக்மென்டேஷன் போக்கவும் உதவுகிறது.
சன்ஸ்கிரீனை இரண்டு விரல் நீளத்திற்கு எடுத்துக்கொண்டு முகம், காது, கழுத்து என்று தடவ வேண்டுமென கூறுகிறார்கள். இதுவே இரண்டு விரல் விதிமுறையாம். இது இளைய தலைமுறையினரிடம் பிரபலமடைந்தாலும், இதுபோன்றவையெல்லாம் உண்மை கிடையாது என்று கூறுகின்றனர். சன்ஸ்கிரீனை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருமே பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தகக்கது.
- சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
- முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
`வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ…
சோப்பின் பயன்பாடு:
சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.
மேக்-அப் போடும் முறை:
மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.
ஆரோக்கியமான கூந்தல் பெற:
இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.
மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.
கைகள் பராமரிப்பு:
இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.
- மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.
- ஈரப்பதமூட்டும் பாடி லோஷனையும் பயன்படுத்துங்கள்.
குளிர்காலங்களில் வறண்ட வானிலை இருக்கும் போது சருமத்தை இளமையாகக் காண்பிக்க உங்கள் சிறந்த நண்பராக மாய்ஸ்சரைசர் இருக்கும். அதேநேரம் இயற்கையான சருமத்திற்கு ஏற்ற எண்ணெய்களை பயன்படுத்தவும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உங்கள் முக அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல் தோல் பராமரிப்பு ஒழுங்குமுறையின் ஒரு கருவியாக மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.
கூடுதலாக ஹைட்ரேட்டிங் நைட் க்ரீம் மற்றும் கண்களுக்குக் கீழ் சீரம் பயன்படுத்துவது மென்மையான சருமத்தை ஈரப்பதம் இழப்பில் இருந்து திறம்பட பாதுகாக்கும்.
சூடான குளியல் தவிர்க்கவும்
ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க அதிகபட்சமாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஷவர் பயன்படுத்தாதீர்கள். சருமத்தை நீண்ட நேரம் அழகாக வைத்திருக்கக்கூடிய ஈரப்பதமூட்டும் பாடி வாஷைத் தேர்வு செய்யவும். குளித்த பிறகு சருமத்தை தேய்ப்பதை விட உலர வைக்கவும். ஈரப்பதமூட்டும் பாடி லோஷனையும் பயன்படுத்துங்கள்.
இரவில் ஃபேஸ் மாஸ்க் அல்லது க்ரீமை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளவும். குளிர்காலத்தில் தோல் வெடிப்பு கவலை தரும்போது உங்கள் முகம், கழுத்து மற்றும் மார்பிற்கு மேல் ஈரப்பதமூட்டும் நைட் கிரீம் தடவுங்கள்.
சன்ஸ்கிரீன் பயன்பாடு
குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பலர் சன்ஸ்கிரீனின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. எனினும் கூட உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீனின் தேவை மாறவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
கற்றாழை பயன்பாடு
கற்றாழை இனிமையான பண்புகளைக் கொண்டுள்ளது. இது எரிச்சலூட்டும் சருமத்தை நிவர்த்தி செய்வதற்கான சரியான தேர்வாக அமைகிறது. உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதத்தை வழங்கச் சில துளி தேங்காய் அல்லது வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்ப்பதன் மூலம் அதன் நன்மைகளை அதிகரிக்க செய்யும். இந்தக் கலவையானது உங்கள் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
- நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….
- சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.
சூரியனின் புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதை தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.
* நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….
* சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்' 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்த அளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்' 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 எஸ்பிஎஃப் சிறந்தது.
* முகத்துக்கு மட்டும்மல்ல வெயில்படும் எல்லா இடங்களிலும் (கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் லோஷன் தடவலாம்.
* சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.
* என்னதான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் செல்வதை தவிர்த்து விடுங்கள். தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தை கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
தரமான பிராண்டட் சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் என்று பரிசோதித்து வாங்குங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்