search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ் வாஷ்"

    • எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறைகளை பார்க்கலாம்.
    • தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

    இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும்.

    இதன் மூலம் அழகான, பளிச் என்ற சருமத்தை பெற முடியும். அந்த வகையில் தற்போது எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

    * அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் முகத்தில் எண்ணெய் வழியும் போதெல்லாம் துணியை கொண்டு துடைக்கவும். முகத்திற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயறுதமாவு போட்டு கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

    * தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும். அடிக்கடி பீட்ரூட் தக்காளி சாறு குடித்து வந்தால் சருமத்திற்கு நல்லது. முதலில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.

    * தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் தடவுங்கள். பின்பு இன்னொரு பகுதியில் கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை 3 முறை செய்து வர வேண்டும்.

    * துளசி, வேப்பிலை, புதினா மூன்று இலைகளையும் சமஅளவு எடுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மிருதுவான பேஸ்ட்டில் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ் பேக் ரெடி. முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

    இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக் கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகள் ஏற்படும்.
    • பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள்.

    காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு சரியான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள் குறித்தும், எப்படி முகம் கழுவ வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

    சூடான நீரை பயன்படுத்துதல்:

    சூடான நீரை கொண்டு ஒருபோதும் முகம் கழுவக்கூடாது. வெயில் காலத்தில் குழாயில் இருந்து வரும் சூடான நீரும் முகம் கழுவுவதற்கு ஏற்றதல்ல. அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசை தன்மையை அகற்றி, வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவுவதுதான் சரியானது.

    ஈரப்பதமான துடைப்பான் பயன்படுத்துதல்:

    `வெட் வைப்ஸ்' எனப்படும் ஈரப்பதமான துடைப்பான்களில் பெரும்பாலும் ரசாயனங்கள் கலந்திருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு அவற்றை பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவை தற்காலிகமாக முகத்தை சுத்தம் செய்தாலும், சருமத்தில் படிந்திருக்கும் கூடுதல் எண்ணெய் பசைத்தன்மை மற்றும் அழுக்கை முழுமையாக அகற்றாது. சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி சருமத்திற்கு அசவுகரியத்தை உண்டாக்கக்கூடும். அதனால் அவற்றை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.

     சோப் உபயோகித்தல்:

    தோல் வகைக்கு பொருத்தமான பொருட்களை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். கடினத்தன்மை கொண்ட சோப், கிளென்சரை பயன்படுத்துவது சருமத்தில் வறட்சி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். சருமத்தின் தன்மைக்கு ஏற்ற பேஸ்வாஷை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

     அழுக்கு துண்டு பயன்படுத்துதல்:

    முகத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்யவேண்டும். அழுக்கான கைகளை கொண்டு முகத்தை கழுவுவது, அழுக்கு துண்டை கொண்டு முகம் துடைப்பது சருமத்தில் பாக்டீரியா, அழுக்கு படிவதற்கும், சரும நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

     சருமத்திற்கு அழுத்தம் கொடுப்பது:

    கைகளை கொண்டு சருமத்தை அழுத்தி தேய்ப்பது, துணியை கொண்டு முகத்தை அழுத்தமாக துடைப்பது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகத்தை கழுவும்போது உள்ளங்கைகள் அல்லது விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்வது நல்லது.

    இறந்த செல்களை அகற்றுதல்:

    குறிப்பிட்ட கால இடைவெளியில் இறந்த சரும செல்களை நீக்குவது முக்கியமானது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். இறந்த செல்களை நீக்குவதற்கு தோல் வகைக்கு ஏற்ற மென்மையான எக்ஸ்போலியண்டை தேர்வு செய்வது நல்லது.

     எத்தனை முறை முகம் கழுவலாம்?

    காலையில் ஒருமுறை, இரவில் ஒருமுறை முகத்தை சுத்தம் செய்யலாம். வெளியே செல்பவராக இருந்தால் சுற்றுப்புற மாசுபாடால் முகத்தில் படியும் அழுக்கு மற்றும் வியர்வையை அகற்ற கூடுதலாக ஒருமுறை முகம் கழுவலாம். எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவும்போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்கக்கூடும். எனவே சரும நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப செயல்படுவது சிறந்தது.

    • சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
    • முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    `வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ…

     சோப்பின் பயன்பாடு:

    சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

    இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

     மேக்-அப் போடும் முறை:

    மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

     ஆரோக்கியமான கூந்தல் பெற:

    இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

    மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

     கைகள் பராமரிப்பு:

    இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

    ×