search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Hair conditioner"

  • சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
  • முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  `வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ…

   சோப்பின் பயன்பாடு:

  சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

  இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

   மேக்-அப் போடும் முறை:

  மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

   ஆரோக்கியமான கூந்தல் பெற:

  இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

  மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

   கைகள் பராமரிப்பு:

  இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

  • பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
  • வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.

  அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவை அனைத்தும் நம் தலைமுடிக்கு நிரந்தரமானவை அல்ல என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. எனவே எந்தவொரு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிப்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே. எனவே, அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.

  தேவையான பொருட்கள்:

  ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்

  கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்

  செய்முறை

  முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

  அதன்பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை கட்டிவிட வேண்டும். பின்னர் இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விட வேண்டும்.

  முக்கிய குறிப்புகள்:

  * எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.

  * உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்தக் கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.

  * கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.

  எண்ணெய்ப் பசை இல்லாத கூந்தல் பகுதியில் மட்டும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் போதும். ஹேர் கண்டிஷனிங்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
  கண்டிஷனர் என்பது, நம் கூந்தலை எண்ணெய்த்தன்மையுடன் வைத்து வறட்சியிலிருந்து காப்பதற்கே. இயற்கையாகவே நம் ஸ்கால்ப், எண்ணெய்ப் பசையைச் சுரந்துகொண்டிருக்கும். அதனால், ஸ்கால்ப்பில் எப்போதும் எண்ணெய்த்தன்மை இருக்கும். எனவே, எண்ணெய்ப் பசை இல்லாத கூந்தல் பகுதியில் மட்டும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் போதும்.

  ஹேர்கலரிங், டையிங், ப்ளீச் போன்ற கெமிக்கல் சிகிச்சைகள் எடுத்துகொண்டவர்கள், இரண்டு அடுக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் கண்டிஷனர்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் அவர்களின் கூந்தலைப் பாதுகாக்கும். இதுபோன்ற சிகிச்சைகள் எடுத்துகொள்ளாதவர்கள், நார்மல் கண்டிஷனரையே உபயோகிக்கலாம்.

  ஷாம்பு பயன்படுத்தி தலையை இரண்டு முறை அலசிய பிறகு, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் கண்டிஷனருடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மேலிருந்து கீழ்நோக்கி கண்டிஷனரை அப்ளை செய்து, 3 நிமிடத்துக்கு அப்படியே விட்டுவிடவும். அதன்பின், சுத்தமான நீரால் கூந்தலை அலசினால், வறட்சி நீங்கி பளபளக்கும்.

  கண்டிஷனர் க்ரீம், ஜெல், ஃபோம் எனப் பல வகை தன்மையில் உள்ளது. டிரை ஹேர் உடையவர்கள், க்ரீம் போன்ற கண்டிஷனர்களை தேர்வுசெய்து பயன்படுத்தவும். கர்லி ஹேர் உடையவர்கள், ஜெல் கண்டிஷனரை தேர்வுசெய்யலாம். ஸ்டெர்யிட் ஹேர் உடையவர்களுக்கு, க்ரீம் பேஸ்ட் அல்லது ஃபோம் பேஸ்ட் கண்டிஷனர்கள் பெஸ்ட் சாய்ஸ்.  அதிக எண்ணெய்ப் பசை கூந்தல் உடையவர்கள், பொடுகுப் பிரச்னைகள் உடையவர்கள், சீகைக்காய் பயன்படுத்துபவர்கள், கண்டிஷனர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

  கண்டிஷனர் வாங்கும்போது, உங்களின் கூந்தலின் தன்மையை மனதில்கொண்டு டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலோ, காஸ்மெடிக் கடைகளிலோ வாங்குவது நல்லது.

  அவகேடா பழத்தின் சதைப் பகுதியை, ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு, கூந்தலில் மட்டும் தேய்த்து, 5 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

  பூந்திக்கொட்டையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு, அந்தத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு, இந்தத் தண்ணீரை பயன்படுத்தி ஒருமுறை கூந்தலை அலசவும். இது, இயற்கையான கண்டிஷனராக உங்கள் கூந்தலை காக்கும்.

  வினிகரை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, கால் கப் தண்ணீடில் கலக்கவும். இதை, ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
  ×