search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "anti-wrinkle"

  • சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
  • முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  `வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ…

   சோப்பின் பயன்பாடு:

  சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

  இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

   மேக்-அப் போடும் முறை:

  மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

   ஆரோக்கியமான கூந்தல் பெற:

  இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

  மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

   கைகள் பராமரிப்பு:

  இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

  • கடுகு எண்ணெய்யை பலரும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
  • கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது.

  கடுகு எண்ணெய்யை பலரும் சமைய லுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இதை மேற்பூச்சாகவும் யோகிக்க முடியும் இந்த எண்ணெய்யில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள் சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக் அலிக் பாவமிடிக் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன.

  சரும நிறம்:

  கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது. இது பிரி-ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும். இதில், சிறந்த ஆக்சிஜனேற்றங்கள் உள்ளதால் சரும செல்களை மேம்படுத்தும். இளமையிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் ஆற்றலும் இந்த எண்ணெய்க்கு உண்டு. இதைத்தொடர்ந்து முகத்தில் தடவும்போது மெல்லிய கோடுகள். சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளை குறைக்க உதவும். தோல் அமைப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்தும். முகத்தில் உள்ள கருந்திட்டுகள், கரும்புள்ளிகளை குறைக்க உதவுவதுடன், முகத்திற்கு இயற்கையான பளபளப்பையும் தரும்.

  சன்ஸ்கிரீன்:

  கடுகு எண்ணெய்யில் மாய்ஸ்சுரைசர் பண்புகள் உள்ளன. அவை உலர்ந்த மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதடுகளை குணப்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும். இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலங்கள். இறந்த சரும செல்களை அகற்றவும். வெயிலினால் முகம் கறுத்துப்போவதை தடுக்கவும் உதவிபுரியும். இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, இயற்கையான சன்ஸ்கிரின்போல் செயல்பட்டு, சூரியனின் புறஜாதா கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்பை தடுக்கும்.

  முடி வளர்ச்சி

  தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் போலிவில்லாத கூந்தலுக்கு சுடுகு எண்ணொய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும். இதில் உள்ள ஆஸ்டி-பாக்டீரியல் பண்புகள் ' வழுக்கை விழவது மற்றும் ஸ்கால்ப் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். கடுகு எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவி வரும்போது பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

  பாத வெடிப்பு:

  பலருக்கும் வறட்சி காரணமாக கால்களில் வெடிப்பு. நகங்கள் வெடிப்பு, தோல் உரிதல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மழை மற்றும் குளிர்காலங்களில் இதுமேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க கடுகு எண்ணெய்யை பாதங்களில் பூசி வரலாம்.

  கொழுப்பைக் குறைக்கும்:

  கடுகு எண்ணெய் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்றுப்பகுதியில் கொழுப்பு தேங்கி உள்ளவர்கள். அப்பகுதியில் இந்த எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தினமும் தடவி வரலாம். இதுபோன்று மசாஜ் செய்யும்போது, உடலில் இருந்து ஒருவித சூடு வெளியேறும். இது உடலில் பல நாட்களாக தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

  • பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும்.
  • முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

  பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

  ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் செய்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும்.

  மேலும் உங்களது சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

  எலுமிச்சை ஸ்க்ரப்:

  நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.

  பால்

  பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் ௧௫ அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.

  அன்னாசி கூழ்:

  வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.

  ஆலிவ் ஆயில்:

  தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

  வாழைப்பழம்:

  மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்து கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.

  ×