search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "benefits of betel nut"

    • வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி தெரியுமா?
    • வெற்றிலையில் சரும பொலிவுக்கு உதவும் கலவைகள் உள்ளன.

    வெற்றிலையின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து அனைவரும் அறிவோம். ஆனால் வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? வெற்றிலையில் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சேர்மங்கள் நிறைந்துள்ளன. சரும பராமரிப்பில் வெற்றிலையை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை பெறலாம். முகத்தில் தோன்றும் பருக்கள் தொடங்கி, கருத்திட்டுகள், வயதான தோற்றம், சுருக்கம் இவை எல்லாவற்றையும் சரிசெய்யும் ஆற்றல் வெற்றிலையில் உள்ளது.

    பல நேரங்களில் நம் முகம் சில சருமம் பிரச்சனைகளை சந்தித்து வருவது வழக்கம். இதனால் நம் முகத்தின் அழகு பாதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இதற்காக பலர் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இனி அதற்கு அவசியமே இருக்காது. ஏனென்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும் வெற்றிலையை வைத்து ஒரு சூப்பரான வெற்றிலை ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    வெற்றிலை – 5

    தேன் – 3 டீஸ்பூன்

    தயிர் – 1 டீஸ்பூன்

    அரிசி மாவு – 1 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு 5 வெற்றிலையை எடுத்து சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தயிர், 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு, இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து கொள்ளவும்.

    அதன் பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். பின்னர் கற்றாழை ஜெல் இருந்தால் முகத்தில் அப்ளை செய்து, ஜென்டில் மசாஜ் கொடுத்தால் போதும். மேலும் இந்த ஃபேஸ் பேக்கை நாம் பருக்களால் பாதிக்கப்படும் போது, அப்ளை செய்து வந்தால் உடனடியான தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

     சருமத்திற்கு வெற்றிலை தரும் நன்மைகள்

    வெற்றிலையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள் மற்றும் கட்டிகள் சருமத்தில் ஏற்படாமல் தடுக்கின்றன. பருவால் முகம் சிவப்பாக மாறும் பிரச்சனையையும் வெற்றிலை சரிசெய்கிறது.

    ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த வெற்றிலை, வயதான தோற்றத்தை தரும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. வெற்றிலையில் சரும பொலிவுக்கு உதவும் கலவைகள் உள்ளன.

    வெற்றிலையில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

    வெயிலில் சென்றால் திடீரென்று சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் எரியும் உணர்வை சரிசெய்ய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை சருமத்திற்கு ஃபிரஷ் லுக்கை தருகிறது.

    ×