search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workshop owner"

    • ஒர்க்ஷாப் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • முத்துக் கருப்பன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெரு தென்றல் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது55). இவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். மதுரை நரிமேடு பி.டி.ராஜன் ரோட்டை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (55). இவரது மனைவி மீனா (50).

    இவர்கள் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த தொழி லில் பங்குதாரராக சேர்ந்தால் அதிக லாபம் கிடைக்கும் என முத்துக் குமரனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய முத்துக்குமரன் பல தவணைகளில் ரூ.18 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் முத்துக்கருப்பன் லாபத்தில் பங்குதராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்துக்குமரன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதில் ரூ. 3 லட்சம் மட்டும் முத்துக் கருப்பன் திருப்பி கொடுத்துள்ளார். மீதி ரூ.15 லட்சத்தை திருப்பித்தராமல் இழுத் தடித்து வந்துள்ளார்.

    பலமுறை கேட்டுப் பார்த்தும் கிடைக்காததால் முத்துக் குமரன் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக் கருப்பன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 21)
    • சேரகுளம் அருகே உள்ள சிரியந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

    செயங்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 21). இவர் தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தில் மோட்டார் சைக்கிள் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு நெல்லை மாவட்டம் இட்டடி அருகே மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துவிட்டு கடைக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சேரகுளம் அருகே உள்ள சிரியந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

    இதில் காளிதாஸ் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சேரகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த காளிதாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காளிதாஸ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான தாழையூத்து ரெயில்வே பீடர் ரோடு சேர்ந்த நல்லையா (40) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தூத்துக்குடியில் கார் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    • மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகரை அடுத்த பால தண்டாயுத நகரை சேர்ந்தவர் இசக்கி (வயது 50). இவர் மடத்தூர் பகுதியில் கார் டிங்கரிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றார். அதிகாலை 4 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வீட்டு பத்திரங்கள் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து இசக்கி தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளையர்கள் பிரிட்ஜில் இருந்த திண்டபண்டங்களை எடுத்து திண்றுள்ளனர். மேலும் குழந்தைகளின் பள்ளிக்கூட பையில் வைத்திருந்த பாக்கெட் மணி பணம் ரூ.200-ஐயும் எடுத்து சென்றுள்ளனர்.

    மேலும் தங்களின் கைரேகைகளை அழிக்க 4 குடங்களில் இருந்து தண்ணீரை எடுத்து வீட்டின் அனைத்து அறைகளிலும் ஊற்றி, கழுவி சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    கொள்ளை குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதலியார்பேட்டையில் பள்ளத்தில் இறங்கிய காரை தடுக்க முயன்றபோது ஒர்க்‌ஷாப் உரிமையாளர் சுவரில் தலைமோதி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை துலுக்கானத்தம்மன் நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 45). இவர் முதலியார் பேட்டை காயத்ரி நகரில் கார் டிங்கரிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை ஒர்க்‌ஷாப் எதிரே காரை நிறுத்தி திருநாவுக்கரசு டிங்கரிங் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது மேகம் திரண்டு மழை பெய்யவே காரை அவசர அவசரமாக ஒர்க்‌ஷாப்பின் உள்ளே தள்ளி வந்தார்.

    அப்போது கார் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் பதட்டத்தில் காரை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக காருடன் பள்ளம் அருகே உள்ள சுவரில் திருநாவுக்கரசு தலை மோதியது.

    இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து திருநாவுக்கரசு இறந்து போனார். ஆனால், திருநாவுக்கரசு இறந்து கிடந்தது தெரியாமல் அவரது மனைவி வனஜா ஒர்க்‌ஷாப்புக்கு வந்து தேடி பார்த்தார். பின்னர் வேலை வி‌ஷயமாக வெளியே சென்றிருப்பார் என கருதி வீட்டுக்கு வந்துவிட்டார்.

    நேற்று காலை கார் உரிமையாளர் ஒர்க்‌ஷாப்புக்கு வந்து பார்த்த போது தான் திருநாவுக்கரசு இறந்து கிடந்தது தெரிய வந்தது. பின்னர் இது பற்றி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×