search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vallanadu"

    • அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது
    • கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்ட த்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனடி ப்படையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி யாளர்களுக்கான வட்டார அளவிளான சிறப்பு மருத்துவ முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.

    முகாமினை கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உலகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்று நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் 490 பேர் பயனடைந்தனர். 6 பேர் உயர் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக் கப்பட்டனர். கருங்குளம் யூனியன் அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு நன்றி கூறி னார்.

    • அங்கக பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி வடவல்லநாடு கிராமத்தில் நடந்தது.
    • அறிவியல் மைய பொருட்பறிஞர் முருகன் அங்கக பண்ணையத்தின் பயன்கள் குறித்து எடுத்துக் கூறினார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அங்கக பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி வடவல்லநாடு கிராமத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமை தாங்கி பேசினார். விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் சுரேஷ், விதை சான்று துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். அறிவியல் மைய பொருட்பறிஞர் முருகன் அங்கக பண்ணையத்தின் முக்கியத்துவம் குறித்தும், பயன்கள் குறித்தும், விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    வேளாண்மை துணை அலுவலர் பரமசிவம் வேளாண்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர் சிவபெருமாள் துறை செயல்பாடுகள் குறித்து கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜலட்சுமி, மகேஸ்வரி, முத்துசங்கரி ஆகியோர் செய்து இருந்தனர். பயிற்சியில் வடவல்லநாடு கிராமத்தை சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனர்.

    • தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோயகற்றும் திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
    • கீழவல்லநாடு டிமேஜ் பில்டர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் வைத்து நடைபெற்றது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோயகற்றும் திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம். கீழவல்லநாடு டிமேஜ் பில்டர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் வைத்து நடைபெற்றது. முகாமினை நிறுவனத்தின் மேலாளர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். டிமேஜ் நிறுவனத்தின் மனித வளப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

    முகாமில் 70 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 9 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மஹாராஜன் நன்றி கூறினார். இம்முகாமில் மாவட்ட காசநோய் மைய அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், ஆய்வகநுட்பனர் உஷாராணி, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, அரி பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.

    • கோவில் மிகவும் பழுதடைந்து காண ப்பட்டதால் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • முதல் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் திருமூலநாதர் எனும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது.

    கோவில் மிகவும் பழுதடைந்து காண ப்பட்டதால் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வல்லநாடு திருமூலநாதர் கோவில் சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் இக்கோ விலுக்காக தன்னா ர்வலர்கள் இணைந்து ரூ.2 கோடி செலவு செய்ய முன் வந்துள்ளனர். எனவே ரூ.3 கோடி ரூபாய் செலவில் கோவில் சீரமைப்பு பணி தொடங்க உள்ளது.

    இதற்காக முதல் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள ரூ.1 கோடியை கொண்டு கோவில் பணிகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த நிலையில் வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. சுப்பிரமணியன், தாசில்தார் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, பாக்கியலீலா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, பாரதி பள்ளி தாளாளர் சங்கரலிங்கம், வட வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் பேபி சங்கர், நங்கமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

    வல்லநாடு திருமூலநாதர் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்த காட்சி.

    ×