வல்லநாட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறதுகருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்
முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்
Published on

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்ட த்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனடி ப்படையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி யாளர்களுக்கான வட்டார அளவிளான சிறப்பு மருத்துவ முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.

முகாமினை கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உலகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்று நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் 490 பேர் பயனடைந்தனர். 6 பேர் உயர் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக் கப்பட்டனர். கருங்குளம் யூனியன் அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு நன்றி கூறி னார்.

X

Maalai Malar
www.maalaimalar.com