search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லநாடு திருமூலநாதர் கோவிலில் ரூ.3 கோடி  செலவில் திருப்பணிகள் தொடக்கம்
    X

    திருமூலநாதர் கோவிலில் திருப்பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்த காட்சி.

    வல்லநாடு திருமூலநாதர் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகள் தொடக்கம்

    • கோவில் மிகவும் பழுதடைந்து காண ப்பட்டதால் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • முதல் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் திருமூலநாதர் எனும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது.

    கோவில் மிகவும் பழுதடைந்து காண ப்பட்டதால் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வல்லநாடு திருமூலநாதர் கோவில் சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் இக்கோ விலுக்காக தன்னா ர்வலர்கள் இணைந்து ரூ.2 கோடி செலவு செய்ய முன் வந்துள்ளனர். எனவே ரூ.3 கோடி ரூபாய் செலவில் கோவில் சீரமைப்பு பணி தொடங்க உள்ளது.

    இதற்காக முதல் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள ரூ.1 கோடியை கொண்டு கோவில் பணிகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த நிலையில் வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. சுப்பிரமணியன், தாசில்தார் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, பாக்கியலீலா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, பாரதி பள்ளி தாளாளர் சங்கரலிங்கம், வட வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் பேபி சங்கர், நங்கமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

    வல்லநாடு திருமூலநாதர் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்த காட்சி.

    Next Story
    ×