search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ வல்லநாட்டில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
    X

    முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்

    கீழ வல்லநாட்டில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

    • தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோயகற்றும் திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
    • கீழவல்லநாடு டிமேஜ் பில்டர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் வைத்து நடைபெற்றது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோயகற்றும் திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம். கீழவல்லநாடு டிமேஜ் பில்டர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் வைத்து நடைபெற்றது. முகாமினை நிறுவனத்தின் மேலாளர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். டிமேஜ் நிறுவனத்தின் மனித வளப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

    முகாமில் 70 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 9 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மஹாராஜன் நன்றி கூறினார். இம்முகாமில் மாவட்ட காசநோய் மைய அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், ஆய்வகநுட்பனர் உஷாராணி, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, அரி பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.

    Next Story
    ×