என் மலர்

  நீங்கள் தேடியது "Trinamool"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘தி கிரேட் காளி’ என அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. #Trinamool #ElectionCommission #TheGreatKhali #BJP
  கொல்கத்தா:

  ‘தி கிரேட் காளி’ என அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா. தற்போது இவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, அங்கு வசித்து வருகிறார்.

  இந்த நிலையில் அவர் இங்கு வந்து பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் செய்துள்ளது.

  அதில், “தி கிரேட் காளி அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கிறார். அவரது பிரபலத்தை பயன்படுத்தி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. இந்தியாவில் யார் ஒரு பொருத்தமான எம்.பி.யாக இருக்க முடியும் என்பது பற்றி முழுமையாக தெரியாத ஒருவர் இந்திய வாக்காளர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துதற்கு அனுமதிக்க கூடாது” என கூறப்பட்டுள்ளது.

  இந்த புகார், மேற்கு வங்காள மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஏப்ரல் 26-ந் தேதி, ஜாதவ்பூர் தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவுடன் தி கிரேட் காளியும் சேர்ந்து பிரசாரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடையே தி கிரேட் காளி அளித்த பேட்டியில், “என்னை எப்போது அழைத்தாலும் நான் வருவேன். அமெரிக்காவில் இருந்து என் தம்பிக்கு ஆதரவு தர வந்துள்ளேன். உங்கள் ஓட்டுகளை வீணடிக்காதீர்கள். அனுபம், படித்தவர். உங்கள் கஷ்டங்கள் தெரிந்தவர். மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்” என குறிப்பிட்டுள்ளார்.  #Trinamool #ElectionCommission #TheGreatKhali #BJP 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்களவையில் இன்று எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், என்ஆர்சி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
  புதுடெல்லி:

  மக்களவை இன்று கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

  எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலிமைப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) வரைவு பட்டியல் வெளியான பிறகு, வங்கதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் வலியுறுத்தினார். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.  இப்படி பல்வேறு விவகாரங்களை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையை தொடர்ந்து நடத்தினார்.

  இதனால் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை அமைதியாகச் சென்று தங்கள் இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஜீரோ அவரில் அனைத்து கட்சிகளுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்பிறகு உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் மம்தாபானர்ஜி முன்னிலையில் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. #Parliamentaryelection, #MamataBanerjee
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

  பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளையும் ஒன்று திரட்டி வலுவாக எதிர்க்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். அதன்படி பிரதமர் பதவியையும் விட்டு கொடுக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.

  மாநில கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக மாநில கட்சியின் பெண் தலைவரை பிரதமர் பதவிக்கு நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் பதவியில் மம்தாபானர்ஜி முன்னிலையில் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான டெரிக் ஒ பிரையன் கூறியதாவது:-


  2018-19-ம் ஆண்டு கூட்டாட்சி என்று நினைக்கிறேன். ஏனென்றால் மாநில கட்சிகள் மத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் மம்தா பானர்ஜிதான் இந்த அணிக்கு மிக மூத்த தலைவர்களில் ஒருவராக மதிப்பீடப்படுவார்.

  எல்லோரது கவனமும் பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும். பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜியே தகுதியானவர். புதிதாக எதுவுமில்லை. அவரே பிரதமர் வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ளார்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பிரதமர் பதவியை காங்கிரஸ் தியாகம் செய்யும் முடிவை வரவேற்றுள்ளார். #Parliamentaryelection, #PMCandidate #MamataBanerjee
  ×