என் மலர்
நீங்கள் தேடியது "கொடி மரம்"
- கொடிமரம், பொதுவாக சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய ஐந்து வகையான மரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
- கோவிலில் இறைவனை வணங்க முடியாவிட்டாலும் கொடிமரத்தையாவது வணங்குவது அவசியம்.
கொடிமரம் என்பது இந்து கோவில்களில் பலி பீடத்துக்கு அருகே கொடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட மரமாகும். பல ஆலயங்களில் கொடி மரமானது உள்ளது. சமஸ்கிருதத்தில் கொடிமரம், 'துவ ஜஸ்தம்பம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கொடிமரம் மிகவும் புனிதமானது. இதன் சிறப்புகளைப் பற்றி காணலாம்.
பொதுவாக ஆலயங்கள் ஆகம விதிப்படி கட்டப்படுகிறது. அதாவது ஒரு கோவிலை புனித உடலுடன் ஒப்பிடலாம். அதன்படி தலைப்பகுதியை கருவறையாகவும், மார்புப் பகுதியை மகா மண்டபமாகவும், வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்பிள் பகுதி கொடிமரமாகவும், கால் பகுதியை ராஜ கோபுரமாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஆகம விதிப்படி கட்டப்படும் கோவில்களில் திருவிழா நடைபெறும்போது முதல் நாள் கொடியேற்றமானது நடைபெறும். தேவர்கள், இந்த கொடிமரத்தின் வழியாகத்தான் கோவிலுக்குள் வருவதாக கூறப்படுகிறது.
கொடி மரத்தின் அமைப்பு
கொடிமரம், பொதுவாக சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய ஐந்து வகையான மரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மனிதனின் முதுகு தண்டைப் போன்றது கோவிலின் கொடிமரம். நமது முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போல கொடிமரமும் 32 வளையங்களுடன் அமைக்கப்படுகிறது.
கோவில் சன்னிதிக்கும், கோபுரத்துக்கும் இடையே கொடிமரம் அமைந்திருக்கும். அதிகபட்சமாக 13 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்படும். கொடிமரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே நேரம் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்தில் இருக்கும்.
கொடிமரம் மூன்று பாகங்களை கொண்டது. இது பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் அம்சம் பொருந்தியது. சதுரமான அடிப்பாகம் பிரம்மனையும், எண்கோணப்பகுதியான இடைப்பாகம் விஷ்ணுவையும், உருண்ட நீண்ட மேல்பாகம் சிவனையும் குறிக்கிறது. எனவே கொடிமரத்தை வணங்குவது சிறப்பான ஒன்றாகும். கொடிமரத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பர். கொடிமரத்தின் மேலே உலோகத் தகடுகள் அமைக்கப்பட்டிருக்கும். சில கோவிலில் கொடிமரத்தை இடி, மின்னலை தாங்கும் இடிதாங்கியாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சிறப்புகள்
கோவிலில் இறைவனை வணங்க முடியாவிட்டாலும் கொடிமரத்தையாவது வணங்குவது அவசியம். ஏனென்றால் கோவிலில் இறைவனை வணங்குவதும், கொடி மரத்தின் கீழே விழுந்து வணங்குவதும் ஒன்றாக கருதப்படுகிறது. கொடிமரத்தை வணங்கும்போது மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி, தூய மனதுடன் வணங்க வேண்டும். இறைவனின் அருளைப்பெற, நம்மை தகுதிப்படுத்த கொடிமர வணக்கம் அவசியமாகும்.
நம்முடைய ஆன்மா இறைவனை தஞ்சமடைய வேண்டுமானால், நமது மனம் ஒருநிலையுடன் நிறுத்தப்பட வேண்டும். இதை உணர்த்தவே கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். அகர சக்திகளை அழிக்கவும், சிவகணங்களை கோவிலுக்குள் வரவைக்கவும், ஆலயத்தையும் பக்தர்களையும் காக்கவும் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
கொடி மரத்தின் உச்சியில் அந்தந்த கோவில் இறைவனின் வாகனம் அடையாள சின்னமாக அமைக்கப்படும். அதன்படி, விநாயகர் கோவிலில் மூசிகம், சிவன் கோவிலில் நந்தி, விஷ்ணு கோவிலில் கருடன், குபேரன் கோவிலில் நரன், முருகன் கோவிலில் மயில் அல்லது சேவல், சாஸ்தா கோவிலில் குதிரை, வருணன் கோவிலில் அன்னம், எமன் கோவிலில் எருமை, சனிபகவான் கோவிலில் காகம், இந்திரன் கோவிலில் யானை, துர்க்கை மற் றும் அம்மன் கோவில்களில் சிம்மம் என உருவங்கள் பொறித்த கொடி ஏற்றப்படும். இவ்வாறு ஏற்றப்படும் கொடியானது திருவிழா இறுதி நாளில் இறக்கப்படும்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய கொடிமரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் முதலான அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதி. அந்த அளவுக்கு கொடிமரம் மூலவருக்கு நிகராக கருதப்படுகிறது. கொடிமரத்துக்கு அருகில் நின்று நாம் வேண்டும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் சென்றடையும் என்பது நம்பிக்கை.
- சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
- 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.
சேலம்:
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை மஹா கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல், 10.15 மணி முதல் 11.30 மணி வரை புதிய கொடி மரம் நிறுவுதல், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ராஜகோபுர கலசங்களுக்கு பாலாலயம் செய்தல், 19-ந் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை கணபதி வழிபாடு, கிராமசாந்தி , அஷ்ட பலி பூஜை, 24-ந் தேதி காலை 10.30 மணி முதல் 1 மணி வரை விநாயகர் வழிபாடு, புனித தீர்த்த குட புறப்பாடு, முளைப்பாரி ஊர்வலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து நடைபெறும்.
இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திஷா ஹோமம், காப்பு கட்டுதல், 25-ந் தேதி 9.30 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை, 26-ந் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை 2-ம் கால யாக பூைஜ, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.
27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம் , மூலஸ்தான விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர் கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
- 18 படிகள் ஏறி வந்ததும், முதலில் நாம் தரிசிக்க வேண்டியது இந்தக் கொடி மரத்தைதான்.
- ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம்.
கொடி மரம்
18 படிகளையும் கடந்தால், நம் எதிரே தென்படுவது கொடி மரம். பரசுராமர் காலத்தில் இங்கே கொடி மரம் கிடையாது.
பிற்காலத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, பரசுராமரால்
ஐயப்பன் அருகில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த குதுரை, கொடி மரத்தின் மேல் வைக்கப்பட்டது.
18 படிகள் ஏறி வந்ததும், முதலில் நாம் தரிசிக்க வேண்டியது இந்தக் கொடி மரத்தைதான்.
மூலஸ்தானமும் தவக்கோல தரிசனமும்
ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம்.
மாறாக, ஐயப்பன்தான் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார்.
தனது மூன்று விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு 'சின்முத்திரை' காட்டுகிறார்.
'சித்' என்றால் 'அறிவு' எனப்பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.
எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த 'சின்' முத்திரையாகும்.
'சின்' முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிப்பது என்பது, பிறவிப் பயனை அடைந்த சந்தோஷத்தைத் தருகிறது.
ஒவ்வொரு மாதமும் நடை சாத்தும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன் மேல் சாத்துவார்கள்.
அத்துடன், ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையைப் போடுவார்கள்.
இதற்கு தவக்கோலம் என்று பெயர்.
அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள்.
அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும் இந்த அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது.
கோவில் கதவு திறந்து, உலகத்தின் பார்வை அந்தக் கோவிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடுகிறது.
அடுத்த நிமிடமே, அந்த விளக்கும் அணைந்து விடுகிறது.
சின் முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும்.
இந்த அதிசயத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.
- கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.
- இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.
சபரிமலையில் 18ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான்.
கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.
கொடி மரத்தின் உச்சியில் அய்யப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது.
கொடிமரத்தின் வலதுபுறம் கற்பூர ஆழி உள்ளது.
சபரிமலையில் கொடிமரத்தின் முன் வீழ்ந்து பக்தர்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.
இக்கொடி மரத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம், அதன் நீண்ட பாகம் விஷ்ணுவைக் குறிக்கும்.
எனவே சபரிமலை ஆலய கொடிமரம் மும் மூர்த்திகளை குறிக்கிறது.






