என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் அணி"

    • அரசியல் பாதைக்கு இளைஞர்களை தயார்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அவர் கூறினார்.
    • பாஜக மற்றும் காங்கிரஸ் அரசியலின் கொள்கைகளுக்கு எதிராக அணிதிரள்வதில் ASAP அதிக கவனம் செலுத்தும்.

    டெல்லி தேர்தலில் படுதோல்வியை அடுத்து தேசிய அரசியல் கட்சியான ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மாணவர் அமைப்பை அறிவித்துள்ளார்.

    இந்தப் புதிய அமைப்பின் பெயர் "மாற்று அரசியலுக்கான மாணவர் சங்கம்" (ASAP).

    கெஜ்ரிவால், ASAP-ஐ கல்லூரி வளாகத்திலிருந்து மாற்றங்களைத் தொடங்குவதற்கான மாணவர் இயக்கம் என்று விவரித்தார்.

    பாரம்பரிய கட்சி அரசியலுக்குப் பதிலாக, ஆளுகை, கல்வி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் மாற்று அரசியல் பாதைக்கு இளைஞர்களை தயார்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அவர் கூறினார்.

    ஆம் ஆத்மியின் தற்போதுள்ள இளைஞர் பிரிவான சத்ரா யுவ சங்கர்ஷ் சமிதி (CYSS), டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. இருப்பினும், பாஜக மற்றும் காங்கிரஸ் அரசியலின் கொள்கைகளுக்கு எதிராக அணிதிரள்வதில் ASAP அதிக கவனம் செலுத்தும் என்றும், அதே நேரத்தில் CYSS அதன் செயல்பாடுகளைத் தொடரும் என்றும் ஆம் ஆத்மி தெளிவுபடுத்தி உள்ளது.

    டெல்லியில் புதிய மாணவர் அமைப்பை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக, டெல்லி பல்கலைக்கழகங்களில் உறுப்பினர் பிரச்சாரத்தைத் தொடங்கவும் கட்சி முடிவு செய்துள்ளது. மாநிலத்திற்கு வெளியே அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்வேன் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.

    • தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்–கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது.
    • கடவுள் வழிபாடு சமஸ்கிருதம் மொழிக்காக தினமும் ரூ.55 லட்சம் மத்திய அரசு செலவு செய்து வருகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்–கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்–பாளர் முகமது கலிபா, பிரகாஷ் ஆவியூர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கல்யாண சுந்தரம் எம்.பி, அன்பழகன்எம்எல்ஏ துணைமேகர் மேயர் சுப தமிழழகன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினர்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடவுள் வழிபாடு சமஸ்கிருதம் மொழிக்காக தினமும் ரூ.55 லட்சம் மத்திய அரசு செலவு செய்து வருகிறது.ஆனால் செம்மொழி தமிழக்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்து வருகிறது.

    அதிகாரம் மிக்க தினிப்பு மொழியாக இந்தியை மாற்றுவதால் இந்தியாவில் உள்ள மராத்தி மொழிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் அதன் தாய்மொழி அடையாளங்களை அழிந்து வருகின்றது.

    தமிழகத்தில் அனைத்து கடவுளுக்கும் அனுமதி உள்ளது பக்தி வேறு, அரசியல் வேறு என்பது தமிழர்களுக்கு தெரியும்.

    மதம் என்ற சிக்கலில் தமிழகர்கள் விழவில்லை. அதனால் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் பல மத கலவரங்கள் ஏற்பட்டது.

    ஆனால் தமிழகத்தில் ஏற்படவில்லை, இதற்கு பண்பாடுதான் காரணம், இந்த பண்பாடு வருவதற்க்கு காரணம் மொழிதான். மொழிகளுக்கு மிகப் பெரிய வரவலாறு இருக்கும்.

    மொழியை இழந்தால் பண்பாடுகளும் அழிந்து விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், முத்துசெல்வம், சுதாகர், நாசர், கோ.க. அண்ணாதுரை, உதயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.
    • ஆவணங்களுடன் வருகின்ற 18-ந்தேதி மாலைக்குள் மாவட்ட ஒப்படைக்க வேண்டும்.

    கடலூர்:

    வேளாண்மைத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணிக்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய அமைப்பாளர்கள். – துணை அமைப்பாளர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர். துணை அமைப்பாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவும், பெண் துணை அமைப்பாளர் ஒருவரும் இருப்பது அவசியம். ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.

    நியமிக்கப்படவுள்ள நிர்வாகிகள் அனைவரும் கல்லுரி , டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் பயிலக்கூடியவராகவோ இருத்தல் வேண்டும். இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்போர் கடலூர் கிழக்கு மாவட்ட அலுவலகம் ,வலைதள முகவரியிலிருந்தோ பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகின்ற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலைக்குள் மாவட்ட ஒப்படைக்க வேண்டும். அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் அந்தந்த மாவட்டத்திலேயே மாணவர் அணி நிர்வாகிகளால் நடத்தப்படும். நேர்காணல் நடைபெறும் நாள், நேரம், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    ×