search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student team"

    • ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.
    • ஆவணங்களுடன் வருகின்ற 18-ந்தேதி மாலைக்குள் மாவட்ட ஒப்படைக்க வேண்டும்.

    கடலூர்:

    வேளாண்மைத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணிக்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய அமைப்பாளர்கள். – துணை அமைப்பாளர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர். துணை அமைப்பாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவும், பெண் துணை அமைப்பாளர் ஒருவரும் இருப்பது அவசியம். ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.

    நியமிக்கப்படவுள்ள நிர்வாகிகள் அனைவரும் கல்லுரி , டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் பயிலக்கூடியவராகவோ இருத்தல் வேண்டும். இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்போர் கடலூர் கிழக்கு மாவட்ட அலுவலகம் ,வலைதள முகவரியிலிருந்தோ பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகின்ற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலைக்குள் மாவட்ட ஒப்படைக்க வேண்டும். அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் அந்தந்த மாவட்டத்திலேயே மாணவர் அணி நிர்வாகிகளால் நடத்தப்படும். நேர்காணல் நடைபெறும் நாள், நேரம், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்–கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது.
    • கடவுள் வழிபாடு சமஸ்கிருதம் மொழிக்காக தினமும் ரூ.55 லட்சம் மத்திய அரசு செலவு செய்து வருகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்–கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்–பாளர் முகமது கலிபா, பிரகாஷ் ஆவியூர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கல்யாண சுந்தரம் எம்.பி, அன்பழகன்எம்எல்ஏ துணைமேகர் மேயர் சுப தமிழழகன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினர்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடவுள் வழிபாடு சமஸ்கிருதம் மொழிக்காக தினமும் ரூ.55 லட்சம் மத்திய அரசு செலவு செய்து வருகிறது.ஆனால் செம்மொழி தமிழக்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்து வருகிறது.

    அதிகாரம் மிக்க தினிப்பு மொழியாக இந்தியை மாற்றுவதால் இந்தியாவில் உள்ள மராத்தி மொழிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் அதன் தாய்மொழி அடையாளங்களை அழிந்து வருகின்றது.

    தமிழகத்தில் அனைத்து கடவுளுக்கும் அனுமதி உள்ளது பக்தி வேறு, அரசியல் வேறு என்பது தமிழர்களுக்கு தெரியும்.

    மதம் என்ற சிக்கலில் தமிழகர்கள் விழவில்லை. அதனால் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் பல மத கலவரங்கள் ஏற்பட்டது.

    ஆனால் தமிழகத்தில் ஏற்படவில்லை, இதற்கு பண்பாடுதான் காரணம், இந்த பண்பாடு வருவதற்க்கு காரணம் மொழிதான். மொழிகளுக்கு மிகப் பெரிய வரவலாறு இருக்கும்.

    மொழியை இழந்தால் பண்பாடுகளும் அழிந்து விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், முத்துசெல்வம், சுதாகர், நாசர், கோ.க. அண்ணாதுரை, உதயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி, பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் திராவிட மாடல் குறித்து பயிற்சியளித்தனர்.‌‌
    • பயிற்சியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மகளிரணி மற்றும் மாணவரணியினருக்கான, திராவிட மாடல் குறித்த பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.

    கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சரும், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நகராட்சி சேர்மனும், நகர தி.மு.க., செயலாளருமான கருணாநிதி முன்னிலை வகித்தார்.

    மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி, பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டு, பயிலரங்கில் கலந்து கொண்ட மகளிரணி மற்றும் மாணவரணியினருக்கு, திராவிட மாடல் குறித்து பயிற்சியளித்தனர்.‌‌

    பயிற்சியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கயத்தாறு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் ஏஞ்சலா, பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சேதுரத்தினம், விவசாய அணி அமைப்பாளர் ராமர், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் லவராஜா, பொறியாளர் தவமணி, ஜாஸ்மின் லூர்துமேரி, உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×