என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர் ஓம் பிர்லா"

    • 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றசாட்டு
    • ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது.

    மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என்று மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டு கொண்டார். சபாநாயகர் இந்தக் கருத்தைச் எதற்காக கூறினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

    சபாநாயகர் கூறியது குறித்து பேசிய ராகுல் காந்தி, "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சபாநாயகரிடம் என்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் என்னைப் பேச விடவில்லை. அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற தகவலை கூறினார். பின்னர் தனக்கு பேச வாய்ப்பளிக்காமல் அவையை ஒத்திவைத்தார்.

    மக்களவையில் நான் எழுந்து நிற்கும் போதெல்லாம், எனக்குப் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை. அன்று, பிரதமர் மோடி, கும்பமேளா பற்றிப் பேசினார். நான் அதில் கூடுதல் தகவல்களை கூற விரும்பினேன். வேலையின்மை பற்றிப் பேச விரும்பினேன், ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.

    மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், சபாநாயகரைச் சந்தித்து இது குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை பா.ஜ.க. எம்.பி. எழுப்பினார்.
    • மக்களவையை மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக சாடினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா கான், மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை எழுப்பினார். அகவிலைப்படி விவகாரத்தில் அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசால் நேரடியாக உதவ முடியுமா? என கேட்டார்.

    இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொடர்பாக அவையில் கேள்வி எழுப்பியதற்கு கண்டனம் தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இரு எம்.பி.க்களும் மாறி மாறி கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இது சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட ஓம் பிர்லா, உங்களுக்குள்ளே விவாதிக்க வேண்டாம். மக்களவையை ஒரு மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் என சாடினார். 

    • எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
    • வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.

    நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினர்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த ஆண்டு மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது.

    இது முஸ்லிம்கள் நிலம், சொத்துக்கள், மத விவகாரத்தை நிர்வகிக்கும் சுதந்திரத்தைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, இந்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.

    இந்தக் குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். பலமுறை கூடிய கூட்டுக்குழு அமளியிலேயே கழிந்தது. மொத்தம் 44 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அதில் 14 ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.

    இதற்கிடையே, திருத்தி அமைக்கப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது. திருத்த மசோதாவுக்கு குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் பேசுகையில், பெரும்பான்மையுடன் வரைவு மசோதா ஏற்கப்பட்டது. 656 பக்கங்கள் கொண்ட கூட்டுக்குழு அறிக்கையை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தோம். இதை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற கூட்டுக்குழுவினர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் வக்பு வாரிய திருத்த மசோதாவை சபாநாயகரிடம் வழங்கினர்.



    • விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.
    • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வுகள் இன்று தொடங்குகின்றன. இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவம் நிலையில், இது தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.

    கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வுகள் துவங்க இருக்கிறது. அந்த வகையில், இன்று பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    வக்பு வாரிய திருத்த மசோதாவில் 14 திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், கூட்டுக்குழு அறிக்கையை ஜெகதாம்பிகா பால் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்பித்தார். இந்த கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சூழலில் இன்று வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

    பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் ஜனாதிபதி உரைக்கு பதிலளிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு மெக்சிகோ சென்றுள்ளது.
    • மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்.

    மெக்சிகோ சிட்டி:

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்சிகோ சென்றுள்ள இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் அங்கு இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர். மெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார். அப்போது சுவாமி விவேகானந்தரின் மனித நேயத்திற்கான கல்வி, புவியியல் தடைகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது என்று ஓம் பிர்லா கூறினார்.

    இதுதொடர்பாக, ஓம் பிர்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்துவைப்பதில் பெருமை அடைகிறேன். லத்தீன் அமெரிக்காவில் சுவாமிஜியின் முதல் சிலை இதுவாகும். இச்சிலை மக்களுக்கு, குறிப்பாக இப்பகுதி இளைஞர்களுக்கு, மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் உத்வேகமாக இருக்கும். நமது நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். சுவாமிஜியின் செய்தி மற்றும் மனிதகுலத்திற்கான போதனைகள் புவியியல் கட்டுப்பாடுகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது. அவரது செய்தி முழு மனித குலத்திற்கும் உள்ளது. இன்று மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைத்து அவருக்கு பணிவான அஞ்சலி செலுத்துகிறோம் என பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, மெக்சிகோ பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இந்திய-மெக்சிகோ நட்புறவு பூங்காவை மக்களவை சபாநாயகர் திறந்து வைத்தார்.

    மேலும், இந்தியாவும் மெக்சிகோவும் வரலாற்று ரீதியாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதையும், 1947-ல் இந்தியாவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு மெக்சிகோ என்பதையும் ஓம் பிர்லா தெரிவித்தார்.

    ×