என் மலர்
நீங்கள் தேடியது "சட்ட திருத்த மசோதா"
- கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர்.
- மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக தலைவர் வீடு எரிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் நிலங்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமானது. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை இந்த மசோதா பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்பட்டுள்ளன.
இந்நிலையில் வக்பு மசோதாவை எதிர்த்து மணிப்பூரில் போரட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூரின் லிலாங், இம்பால் கிழக்கில் வக்பு சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் லிலாங் பகுதியில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து அங்கு கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
குராய் குமிடோக் பஜாரில் இன்று திட்டமிடப்பட்ட "மனித சங்கிலிப் போராட்டம்" த்துக்கு முன்னதாக இம்பால் கிழக்கு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக சிறுபான்மைத் தலைவர் அஸ்கர் அலியின் லிலாங் பகுதியில் உள்ள வீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திங்களன்று லிலாங் பகுதியில் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதையும், பொதுமக்கள் துப்பாக்கிகள், வாள்கள், குச்சிகள், கற்கள் அல்லது பிற ஆயுதங்களை எடுத்துச் செல்வதையும் தடைசெய்தது.
- வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
- பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதா 2025 சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடி தாக்குதல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா!
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
2014ம் ஆண்டு முதல், பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
முதலில் NJAC மூலம் நீதித்துறை நியமனங்களை அபகரிக்க முயற்சிப்பதன் மூலமும், பின்னர் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலமும். இப்போது, பார் கவுன்சில்கள் மீது கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், சட்டத்துறையின் சுயாட்சியை அரிப்பதன் மூலம் நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
"தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் அது தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது எங்கள் அடையாளம்!
தன்னிச்சையான போராட்டங்களும் வரைவு மசோதாவுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பும் மத்திய அரசை அதை திரும்பப் பெற கட்டாயப்படுத்தினாலும், அது மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற கூற்று கண்டிக்கத்தக்கது.
இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும், சட்டத்துறையின் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் திமுக வலியுறுத்துகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மோசடி நில வழக்குகள் ஏராளமானவை நிலுவையில் உள்ளன.
- நில அபகரிப்பாளர்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத் தரும்.
தமிழகத்தில் சார்பதிவளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் ஒரு சில நேரங்களில் போலியான ஆவணங்களை காட்டி பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.
இதில், சார்பதிவாளர்கள் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் நிலங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நீதிமன்றம் செல்கின்றனர். இந்த மாதிரியான வழக்குகள் ஏராளமானவை நிலுவையில் உள்ளது.
இதனால், வழக்கை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவில், போலியான ஆவண பதிவு செய்யும் பட்சத்தில், மாவட்ட பதிவாளரே உரிய விசாரணை நடத்தி தீர்வு காண முடியும். இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டன.
இதனை தொடர்ந்து அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மோசடியாக பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத் தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.






