என் மலர்
நீங்கள் தேடியது "தங்க செயின் பறிப்பு"
- இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
- தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் சுதா எம்பிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
டெல்லியில் நடைபயிற்சி சென்றபோது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் 4 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தூதரகங்கள், மாநில அரசின் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள, உச்சகட்ட பாதுகாப்பு மிகுந்த சாணக்யாபுரி பகுதியில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் செயினை பறித்துச் சென்றதாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் எம்.பி. சுதா புகாரளித்துள்ளார். அந்த புகாரில் தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் சுதா எம்பிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், சல்வார் கிழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூதாட்டி மரகதவல்லியிடம் மர்ம நபர் 1¼ பவுன் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்டர் தப்பிவிட்டார்.
- இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு திண்டல் அடுத்த வித்யா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மரகதவல்லி (62). நேற்று காலை மரகதவல்லி அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொரு ட்கள் வாங்க சென்றார்.
பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென மரகதவல்லி கழுத்தில் அணிந்திருந்த 2¼ பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.
சுதாரித்து கொண்ட மூதாட்டி மரகதவல்லி செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். எனினும் மர்ம நபர் 1¼ பவுன் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்டர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை அங்குள்ளவர்களிடம் காண்பித்து அவரைப் பார்த்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தனர்.
- போலீசார் விசாரணையில், அவர் மீது சென்னையில் 12 வழக்குகளும், அருப்புக்கோட்டையில் 8 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கே.என்.புரம் பகுதியில் வசிப்பவர் அஞ்சனா ஓஜே,(67,) இவர் கடந்த ஜூலை.18 ந்தேதி மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், அந்த வழியே மோட்டர் சைக்கிளிலில் வந்த ஒருவர் முகவரி கேட்டுள்ளார். தனக்கு தெரியாது என அஞ்சனா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டர் சைக்கிளில் அந்த வாலிபர் மாயமானார். இவரது அலறல் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து கேட்ட போது தங்கச் சங்கிலி பறிகொடுத்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை அங்குள்ளவர்களிடம் காண்பித்து அவரைப் பார்த்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பதிவு எண் இல்லாத மோட்டர் சைக்கிளில் அந்த வாலிபர் கே.என்.புரம் பகுதியில் சுற்றிதிரிவதை கண்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி விளாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் சசிகுமார்,(45) என்பதும் தற்போது கோவை மாவட்டம் சூலூர் மதியழகன் நகரில் வசிப்பதும் தெரியவந்தது.
மேலும் போலீசார் விசாரணையில், அவர் மீது சென்னையில் 12 வழக்குகளும், அருப்புக்கோட்டையில் 8 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 1 பவுன் தங்கச்சங்கிலி, ரொக்கம் ரூ.1500, மற்றும் 1 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






