search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Chain Snatching"

    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை அங்குள்ளவர்களிடம் காண்பித்து அவரைப் பார்த்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தனர்.
    • போலீசார் விசாரணையில், அவர் மீது சென்னையில் 12 வழக்குகளும், அருப்புக்கோட்டையில் 8 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கே.என்.புரம் பகுதியில் வசிப்பவர் அஞ்சனா ஓஜே,(67,) இவர் கடந்த ஜூலை.18 ந்தேதி மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், அந்த வழியே மோட்டர் சைக்கிளிலில் வந்த ஒருவர் முகவரி கேட்டுள்ளார். தனக்கு தெரியாது என அஞ்சனா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டர் சைக்கிளில் அந்த வாலிபர் மாயமானார். இவரது அலறல் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து கேட்ட போது தங்கச் சங்கிலி பறிகொடுத்ததை கூறியுள்ளார்.

    இதையடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை அங்குள்ளவர்களிடம் காண்பித்து அவரைப் பார்த்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பதிவு எண் இல்லாத மோட்டர் சைக்கிளில் அந்த வாலிபர் கே.என்.புரம் பகுதியில் சுற்றிதிரிவதை கண்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி விளாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் சசிகுமார்,(45) என்பதும் தற்போது கோவை மாவட்டம் சூலூர் மதியழகன் நகரில் வசிப்பதும் தெரியவந்தது.

    மேலும் போலீசார் விசாரணையில், அவர் மீது சென்னையில் 12 வழக்குகளும், அருப்புக்கோட்டையில் 8 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 1 பவுன் தங்கச்சங்கிலி, ரொக்கம் ரூ.1500, மற்றும் 1 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×