என் மலர்
நீங்கள் தேடியது "4 பேர் பலி"
- மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற தங்கவேல் மற்றும் பழனிசாமி மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). தொழிலாளி. இவர் பழனிசாமி என்பவருடன் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற தங்கவேல் மற்றும் பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர். அவர்களை வீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தங்கவேலை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரித்தார்.பழனிசாமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). இவர் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அவர் அன்னூர்-கருமத்தம்பட்டி ரோட்டில் நடந்து வந்தார். அப்போது அங்கு சாலையை கடக்க முயற்சி செய்த போது அந்த வழியாக வந்த மினி லாரி மோதி தூக்கி வீசப்பட்டார்.
அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரித்தார்.இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோ ன்று போத்தனூர் சேர்ந்த வில்லியம் (63)என்பவர் நரசிம்ம நாயக்கன் பாளையம்- பெரியநாயக்கன் பாளையம் ரோட்டில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார். பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரை சேர்ந்தவர் விக்ரம் (22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் செந்தில் குமார் என்பவருடன் அன்னூரில் இருந்து சிறுமுகை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் விக்ரம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செந்தில் குமார் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் ஒேர நாளில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது.
- காரின் முன்பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருப்பவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொன்னி மல்லசேரியை சேர்ந்தவர் நிகில் (வயது 27), கனடாவில் வேலை பார்த்து வருகிார். இவருக்கும் அனு (26) என்பவருக்கும் கடந்த 30-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக மலேசியா சென்றனர். அங்கு தேனிலவை முடித்து விட்டு கேரளா புறப்பட்டனர். அவர்களது விமானம் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தது.
தம்பதியரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக அனுவன் தந்தை பிஜு, நிகிலின் தந்தை மத்தாய் ஈப்பன் ஆகியோர் வந்திருந்தனர். விமானத்தில் இருந்து நிகில்-அனு தம்பதி வந்ததும் அங்கிருந்து 4 பேரும் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
அதிகாலை 4 மணிக்கு கார், புனலூர்-மூவாட்டு ப்புழா மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் தமிழக ஐயப்ப பக்தர்கள் பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்ததால் உள்ளே இருப்பவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஹைட்ராலிக் கட்டர் கொண்டு வரப்பட்டு காரின் பாகங்களை உடைத்த பிறகே, அதன் உள்ளே இருந்தவர்களை மீட்க முடிந்தது. அதற்குள் அனுவை தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.
படுகாயம் அடைந்த அனுவை மீட்டு பத்தனம் திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் சிலர் லேசான காயம் அடைந்தனர்.
- தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார்.
- நிலைதடுமாறி கீழே விழுந்த வினோத் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
கோவை:
பெங்களூரை சேர்ந்தவர் வினோத் (வயது 29). இவர் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார். அப்போது அங்கு இருந்த தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வினோத் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபாக இறந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் தங்கவேல் (68). ரேடியோ மெக்கானிக். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் அன்னூர் - கோவை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்பேது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது.
இதில் படுயாகம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தங்கவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரிய நாயக்கன் பாளையம் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் 65 வயது மதிக்க தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்தும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரத்தினபுரியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் குட்டி கவுண்டர் வீதி - சின்னத்தம்பி வீதி சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து காம்பவுண்டு சுவரில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






