search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siruvapuri"

    • இந்திரன் முதலான தேவர்கள் இந்திரலோகம் செல்லக் காரணமாக இருந்தது சிறுவாபுரி.
    • இத்தலத்திற்கு வருபவர்கள் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை.

    1.நஞ்சு நீக்கப்பட்ட அமுதைத் தேவர்கள் இருந்து உண்ட இடம் சிறுவாபுரி.

    2.இந்திரன் முதலான தேவர்கள் இந்திரலோகம் செல்லக் காரணமாக இருந்தது சிறுவாபுரி.

    3.ராமன் அசுவமேத யாகம் செய்வதற்கு முன் அனுப்பிய குதிரையை அடக்கி லவன்குசன் ராமனுடன் போரிட்டு வென்ற இடம் சிறுவாபுரி.

    4.அருண கிரிநாதரால் திருப்புகழில் பாடப்பட்ட தலம் சிறுவாபுரி அர்ச்சனைத் திருப்புகழ், சிறப்புத் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இதுஒன்றே.

    5.சிறுவாபுரியில் புகழ் பெற்ற சிவன் கோவில் ஒன்றும் பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. பெருமாளை தீண்டா திருமேனி என்று அழைக்கிறார்கள். அந்த பெருமாளை அர்ச்சகர்கள் கூட தொடுவது கிடையாது.

    6.பாலசுப்பிரமணியசாமி கோவில் சிறுவாபுரியின் வடமேற்கு மூலையில் தாமரைக்குளத்தின் முன்னால் விரிந்து பரந்து அமைந்துள்ளது.

    7.சிறுவாபுரி ஆலய ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. 2003ம் வருடம் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்று உள்ளது.

    8.சிறுவாபுரி கடவுள்களின் திரு உருவங்கள் பெரும்பாலும் மரகதக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. கொடி மரத்திற்குக் கீழே மயிலும், தென்கிழக்கில் சூரியனார் சிற்பமும், நேர் எதிரில் மரகத கணபதியும், மரகதக்கல்லில் இருப்பது தனிச்சிறப்பு.

    9. பின் பிரகாரத்தில் சண்டிகேசவரர், ஆதிமூலர் நாகேசுவரர், முனீஸ்வரர், பைரவர், நவக்கிரக சன்னதி என பரிவார தேவதைகள் சூழ்ந்து நிற்க நடுநயமாக பாலசுப்பிரமணிய சுவாமியின் சன்னதி உள்ளது.

    10.நவக்கிரகங்கள் ஒன்பதும் வாகனத்துடன் காட்சி தருவது சிறுவாபுரி ஆலயத்தின் மற்றொரு சிறப்பாகும்.

    11.பிரம்மனைத் தண்டித்து பிரம்மனின் படைத்தல் தொழிலை ஏற்றுக்கொண்ட இப்பெருமானின் திருஉருவை வணங்கினால் வித்தைகள் பல கற்ற பலன் உண்டாகும் என புந்தி நிறை அறிவாள என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலால் அறியலாம்.

    12.முருகனின் சன்னதிக்கு எதிரே அருணகிரிநாதரின் விக்கிரகம் முருகனின் புகழ்பாடி நிற்கும்படி அமைந்துள்ளது.

    13.திருவண்ணாமலையைப் போலவே இத்தலத்திலும் அருணகிரி நாதருக்கு முருகப்பெருமான் காட்சி தந்துள்ளார்.

    14.மற்ற கோவில்களைவிட இத்தலத்தில் தான் மிகவும் மகிழ்ச்சிப் பெருக்கால் 'மகிமீற, மகிழ்கூர, மகிழ்வாக, மகிகூற இன்பமுற என ஐந்து இடங்களில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

    15. இத்தலத்திற்கு வருபவர்கள் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை.

    • உற்சவர் : ஸ்ரீ வள்ளிமுருகர் திருமணக்கோலம்
    • தீர்த்தம் : ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருக்குளம்

    மூலவர் : அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமிகள்

    உற்சவர் : ஸ்ரீ வள்ளிமுருகர் திருமணக்கோலம்

    ஏனைய சன்னதிகள்: ராஜகணபதி (மரகத விநாயகர்), அண்ணாமலையார் (அருணாசலேசுவரர்) உண்ணாமுலை (அபீதகுஜாம்பிகை), சூரியனார்,, சண்டிகேஸ்வரர், ஆதிமூலவர், நாகர், வக்கிரகங்கள், காலபைரவர், அருணகிரிநாதர், மயுரநாதர் (மரகத மயில்)

    தல விருட்சம் : மகிழ மரம்

    தீர்த்தம் : ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருக்குளம்

    முகவரி

    அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், சிறுவாபுரி 601 206, சென்னை, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு.

    பெயர்கள்

    சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென்சிறுவாபுரி, ஜெயமதான நகர் (அருணகிருநாதர்), குசலபுரி (ராமாயணத்தில்)

    திருவிழாக்கள்

    தைபூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, திருக்கார்த்திகை

    கோவில் நேரம்

    காலை 7 மணி முதல் 12 மணி வரை

    மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை

    • இவ்வாலயம் ராஜராஜ சோழனின் மகன் ராஜராஜேந்திர சோழ மன்னரால் நிறுவப்பட்டது.
    • இதன் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உயரமான கொடிமரம்.

    திருக்கோவில் மிகுந்த, ஆன்மீக ஆற்றல் மிக்க தமிழ்நாட்டில், அதன் தலைநகரமாம் சென்னையம் பதியிலிருந்து

    வடமேற்கே கொல்கத்தா செல்லும் (என்.எச்.5) நெடுஞ்சாலையில், சுமார் 33 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து,

    அச்சாலையிலிருந்து இடதுபுறமாக, (மேற்காக) பிரிந்து செல்லும் சாலை வழியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம்

    பசுமை மிகு அழகான வயல்களுக்கு இடையே பயணம் செய்தால், அருள் பொழியும், நினைத்ததையெல்லாம்

    அனுகூலமாக்கும் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ள சின்னம்பேடு என்கின்ற சிறுவாபுரியை அடையலாம்.

    சென்னையிலிருந்து செங்குன்றம், காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இத்திருத்தலத்தை அடையலாம்.

    ஆரணி, பெரியபாளையம் மிக அருகில் உள்ள சிறு நகரங்களாகும்.

    சென்னை மாநகர பேருந்துகள் இத்தலத்திற்கு செல்வதால், அத்திருத்தலத்தை அடைவது மிகவும் எளிது.

    நெல் மற்றும் வாழை வயல்களும், ஆலயங்களும் மிகுந்த பெருவூர் அது.

    கிராமத்தை அடையும்போதே முதலில் நம்மை வரவேற்பது, ஏழு கன்னியர் ஆலயம், கிராம நடுவில் அமைந்திருப்பது

    அகத்தீஸ்வரர் ஆலயம், மேற்கே அமைந்திருப்பது பெருமாள் கோவில், அதற்கு அப்பால் துர்கை, ராமர்,

    விநாயகர் மற்றும் விஷ்ணு கோவில்கள் அமைந்துள்ளன.

    கிராமத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்திருப்பது பெருமைக்குரிய அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம்.

    இவ்வாலயம் ராஜராஜ சோழனின் மகன் ராஜராஜேந்திர சோழ மன்னரால் நிறுவப்பட்டது.

    இதன் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உயரமான கொடிமரம்.

    இத்திருக்கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. அவர் நான்கு திருப்புகழில் இத்திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.

    சுமார் 500 ஆண்டுகள் பழமை மிக்கது. ராமாயண கால வரலாற்றையும் உள்ளடக்கியது.

    • செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும் விஷேச வழிபாடு செய்தல் வேண்டும்.
    • நெய் அல்லது இலுப்பை எண்ணைய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.

    சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான தன் சிறுவைதனில் மேவும் பெருமான் வள்ளி மணவாளனாக

    அருட்காட்சியளிக்கும் அற்புதக் கோலத்தை வழிபாடு செய்பவர்கள்.

    இனிமையான இல்லற வாழ்க்கையைப் பெற்று இன்பமடைவர். தடைபட்ட திருமணங்கள் தடைகள் நீங்கப் பெற்று

    மனம் நிறைந்த மங்கல வாழ்வுப்பேறு கிடைக்கும்.

    ஒவ்வொரு மாதமும், பூரம், உத்திரம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும் பவுர்ணமி, சுக்லத்விதியை, சுக்ல சஷ்டி,

    செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும் விஷேச வழிபாடு செய்தல் வேண்டும்.

    நெய் அல்லது இலுப்பை எண்ணைய் விளக்கு ஏற்றியும், பழங்கள், தேன், சுத்தமான (கலப்படமற்ற) சந்தனம்,

    பச்சைக் கற்பூரம் முதலான அபிஷேகங்கள் செய்தும், சிவப்பு பச்சை வஸ்திரங்கள் அணிவித்தும்,

    தேன் கலந்த தினை மாவிளக்கு ஏற்றியும், ரோஜா, சண்முகம், சிவப்புத்தாமரை, சிவப்பு அரளி,

    மகிழம்பூ முதலிய ஏதாவதொரு மலர்மாலை அணிவித்து ஷடாக்ஷர அஷ்டோத்ரம்,

    ஷடாக்ஷரத்ரிசதி வள்ளி மணவாளப் பெருமான் திருப்புகழ் போற்றி 108 ஆகிய ஏதாவதொரு அர்ச்சனை செய்தல் வேண்டும்.

    (பூக்களை கிள்ளி அர்ச்சனை செய்தல்கூடாது. முழுப்பூவாகத்தான் அர்ச்சிக்க வேண்டும்-.)

    வெண்பொங்கல், தேன்குழல், கடலைப்பருப்பு பாயாசம் முதலிய ஏதாவதொரு நைவேத்தியம் செய்தால்

    எல்லா நலன்களும் பெற்று இன்ப மயமான இல்லற வாழ்வை அடையலாம்.

    • சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சத்ருசம்ஹார அர்ச்சனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 6 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி உற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று வியாழக்கிழமை சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    சனிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி, கலசபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.மாலை 4 மணிக்கு மேல் கோவில் எதிரே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வரும் 19-ம் தேதி மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு உற்சவர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    • கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது. 18-ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சி நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று.
    • இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள்.

    வீடுபேறு அருளும் அற்புதத் திருத்தலம் சிறுவாபுரி.

    சென்னை, கொல்கத்தா நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டிக்கு முன்னதாக இத்தலம் அமைந்திருக்கிறது.

    கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று.

    அருணகிரிநாதரின் கனவில் தோன்றி முருகன் அருள் பாலித்த தலம் என்ற சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.

    முருகனுக்கு உகந்த தினங்களில் சிறுவாபுரிக்கு சென்று, அபிஷேக ஆராதனைகள் செய்து தரிசித்து வழிபட வீடு மனை யோகம் அமையும் என்பது ஐதீகம்.

    மயிலம்

    முருகப்பெருமானின் வாகனமாகும் ேபறுபெற்ற சூரன், மயில் உருவத்தில் மலைபோல் நின்று தவம் செய்த தலம், மயிலம்.

    திண்டிவனம் அருகேயுள்ள இந்த தலத்தில் கடும் தவமிருந்து முருகனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார் சங்குகண்ணன் என்ற சித்தர்.

    இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள்.

    மயிலம் முருகனை வழிபட அல்லல்கள் நீங்கும்;

    ஆனந்தம் பெருகும்.

    • உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.
    • கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாகாலாந்து கவர்னர் இலா. கணேசன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். மேலும், உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.

    கோவிலுக்கு வந்த இலா.கணேசனுக்கு அழிஞ்சிவாக்கம் பாஸ்கர் தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×