search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிறுவாபுரி திருத்தல வரலாறு
    X

    சிறுவாபுரி திருத்தல வரலாறு

    • இவ்வாலயம் ராஜராஜ சோழனின் மகன் ராஜராஜேந்திர சோழ மன்னரால் நிறுவப்பட்டது.
    • இதன் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உயரமான கொடிமரம்.

    திருக்கோவில் மிகுந்த, ஆன்மீக ஆற்றல் மிக்க தமிழ்நாட்டில், அதன் தலைநகரமாம் சென்னையம் பதியிலிருந்து

    வடமேற்கே கொல்கத்தா செல்லும் (என்.எச்.5) நெடுஞ்சாலையில், சுமார் 33 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து,

    அச்சாலையிலிருந்து இடதுபுறமாக, (மேற்காக) பிரிந்து செல்லும் சாலை வழியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம்

    பசுமை மிகு அழகான வயல்களுக்கு இடையே பயணம் செய்தால், அருள் பொழியும், நினைத்ததையெல்லாம்

    அனுகூலமாக்கும் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ள சின்னம்பேடு என்கின்ற சிறுவாபுரியை அடையலாம்.

    சென்னையிலிருந்து செங்குன்றம், காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இத்திருத்தலத்தை அடையலாம்.

    ஆரணி, பெரியபாளையம் மிக அருகில் உள்ள சிறு நகரங்களாகும்.

    சென்னை மாநகர பேருந்துகள் இத்தலத்திற்கு செல்வதால், அத்திருத்தலத்தை அடைவது மிகவும் எளிது.

    நெல் மற்றும் வாழை வயல்களும், ஆலயங்களும் மிகுந்த பெருவூர் அது.

    கிராமத்தை அடையும்போதே முதலில் நம்மை வரவேற்பது, ஏழு கன்னியர் ஆலயம், கிராம நடுவில் அமைந்திருப்பது

    அகத்தீஸ்வரர் ஆலயம், மேற்கே அமைந்திருப்பது பெருமாள் கோவில், அதற்கு அப்பால் துர்கை, ராமர்,

    விநாயகர் மற்றும் விஷ்ணு கோவில்கள் அமைந்துள்ளன.

    கிராமத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்திருப்பது பெருமைக்குரிய அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம்.

    இவ்வாலயம் ராஜராஜ சோழனின் மகன் ராஜராஜேந்திர சோழ மன்னரால் நிறுவப்பட்டது.

    இதன் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உயரமான கொடிமரம்.

    இத்திருக்கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. அவர் நான்கு திருப்புகழில் இத்திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.

    சுமார் 500 ஆண்டுகள் பழமை மிக்கது. ராமாயண கால வரலாற்றையும் உள்ளடக்கியது.

    Next Story
    ×