search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sergei Lavrov"

    • ரஷ்யாவை பலவீனப்படுத்த, உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கின்றன.
    • போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது அமெரிக்காவின் கையில் உள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 10 மாதமாக நீடித்து வரும் நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    ரஷியாவிற்கு எந்தவொரு ராணுவ ரீதியான அச்சுறுத்தலையும் உக்ரைன் நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த பிரச்சினைக்கு ரஷியா தீர்வு காணும். ரஷியாவை பலவீனப்படுத்த உக்ரைனில் நடக்கும் போருக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உக்ரைன் மற்றும் அமெரிக்காவின் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் விடுத்த டுவிட்டர் பதிவில், ரஷியா யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும், ஈரானுடனான ரகசிய ஒப்பந்தங்களோ, ரஷிய மந்திரி லாவ்ரோவின் அச்சுறுத்தல்களோ போரை நிறுத்த உதவாது, உக்ரைன் இறுதிவரை போராடி அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் ரஷியாவை வெளியேற்றும். இறுதி வரை அமைதியாக காத்திருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷியாவிற்கு வர வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கி லாவ்ரோவ் இன்று அழைப்பு விடுத்துள்ளார். #KimJongUn #SergeiLavrov
    மாஸ்கோ :

    ரஷிய வெளியுறவு மந்திரி செர்கி லாவ்ரோவ் இன்று வட கொரிய தலைநகர் பியாங்யோங் சென்றடைந்தார். அங்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னை அவர் சந்தித்து பேசினார். அப்போது கிம் ஜாங்-யை ரஷியா வருமாறு செர்கி லாவ்ரோவ் அழைப்பு விடுத்தார். 

    பியாங்யோங் நகரில் கிம் ஜாங் அன்-னை சந்தித்து பேசிய செர்கி லாவ்ரோவ், ‘நீங்கள் ரஷியா வாருங்கள். உங்களை பார்த்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். கொரிய தீபகற்பத்தில் நீங்கள் முன்னெடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் வெற்றி பெற ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.’ என ரஷியா வர கிம் ஜாங்க்கு செர்கி லாவ்ரோவ் அழைப்பு விடுத்துள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கி லாவ்ரோவை வட கொரிய வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #SergeiLavrov

    ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார். #Russia #Iran #NuclearDeal
    மாஸ்கோ:

    வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    ஆனால் அந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பிற நாடுகள், ஒப்பந்தத்தை தொடரப்போவதாக கூறின.

    இந்த நிலையில் ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார்.

    இதற்கிடையே ஈரானுடன் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரான் நாட்டில் சிறைவைக்கப்பட்டு உள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி டிரம்புக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    அமெரிக்க கைதிகள் விவகாரத்தில் ஈரானுடன் டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் உள்ளதா என வெள்ளை மாளிகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் வெள்ளை மாளிகை உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. #Russia #Iran #NuclearDeal
    ×