search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செர்ஜி லாவ்ரோவ்"

    • வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அங்கு ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மாஸ்கோ:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். அப்போது இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இரு நாடுகளின் உறவுகள், குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாட்டு மந்திரிகளும் விவாதிக்க உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது மந்திரி ஜெய்சங்கர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் செல்கிறார்.


    • ரஷ்யாவை பலவீனப்படுத்த, உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கின்றன.
    • போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது அமெரிக்காவின் கையில் உள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 10 மாதமாக நீடித்து வரும் நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    ரஷியாவிற்கு எந்தவொரு ராணுவ ரீதியான அச்சுறுத்தலையும் உக்ரைன் நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த பிரச்சினைக்கு ரஷியா தீர்வு காணும். ரஷியாவை பலவீனப்படுத்த உக்ரைனில் நடக்கும் போருக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உக்ரைன் மற்றும் அமெரிக்காவின் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் விடுத்த டுவிட்டர் பதிவில், ரஷியா யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும், ஈரானுடனான ரகசிய ஒப்பந்தங்களோ, ரஷிய மந்திரி லாவ்ரோவின் அச்சுறுத்தல்களோ போரை நிறுத்த உதவாது, உக்ரைன் இறுதிவரை போராடி அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் ரஷியாவை வெளியேற்றும். இறுதி வரை அமைதியாக காத்திருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×