என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajinikanth birthday"

    • ரஜினி வீட்டில் இல்லை என அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டாலும் ரஜினியை பார்த்து விட்டு தான் செல்வோம் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற 'ஹேஷ்டேக்' டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

    சென்னை:

    ரஜினி பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பூங்கொத்து, கேக் மற்றும் ரஜினி உருவ போஸ்டருடன் அவர்கள் காத்து நின்றனர்.

    ரஜினி வீட்டில் இல்லை என அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டாலும் ரஜினியை பார்த்து விட்டு தான் செல்வோம் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். இதனிடையே ரஜினி நடித்து வரும் 170-வது படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியிடப்படும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதையொட்டி ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்து உள்ளனர். வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் எக்ஸ் தளங்களில் தலைவர் 170, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற 'ஹேஷ்டேக்' டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

    ரஜினி பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகளை ரசிர்கள் நள்ளிரவு முதல் வழங்கியதுடன் கேக் வெட்டி ரஜினி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

    • நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் தனுஷ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இசையமைப்பாளர் டி.இமான் அன்னாத்த பிஜிஎம் உடன் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    நடிகையான சாக்ஷி அகர்வால் ரஜினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    • ரஜினிகாந்த தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
    • கூலி படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கூலி படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

    இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    என ரஜினிகாந்த் கூறினார்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Rajinikanth #MKStalin #PonRadhakrishnan
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரை உலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்து அனுப்பி உள்ளார்.

    தமிழக ப.ஜனதா தலைவர் அலுவலகமும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளது. பா.ஜனதா எம்.பி.யான பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டரில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்துக்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் அவரது நீடித்த ஆயுள், ஆரோக்கியத்திற்கு எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

    ரஜினிகாந்த் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு டுவிட்டரில் நன்றியை தெரிவித்து உள்ளார். #Rajinikanth #MKStalin #PonRadhakrishnan
    ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #HBDSuperStarRajinikanth
    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

    ரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.


    அதேபோல், நடிகர் அமிதாப் பச்சன் அவரது ட்விட்டரில், நண்பர், சக ஊழியர், உணர்ச்சிப்பூர்வமானவர், பிறந்தநாள் வாழத்துக்கள் ரஜினி என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த சனிக்கிழமை நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம் இந்த ஆண்டும் நான் சென்னையில் இருக்க மாட்டேன், எனவே ரசிகர்கள் வீட்டிற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி ரஜினி நேற்று சென்னையில் இருந்து புறப்படார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth #KamalHaasan #HBDSuperStarRajinikanth #HappyBirthdayThalaiva #HappyBirthdaySuperstar 

    ×