என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்
- ரஜினிகாந்த தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
- கூலி படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கூலி படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
என ரஜினிகாந்த் கூறினார்.






