search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "puri jegannath"

  • பூரி ஜெகநாதர் பிரபஞ்சத்தின் கடவுளாகக் கருதப்படுபவர்.
  • மோடிஜி ஜெகநாதரை விட மேலானவரா என கேள்வி எழுப்பினார்.

  டேராடூன்:

  பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பூரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என தெரிவித்தார். அதன்பின், சுதாரித்துக் கொண்ட அவர், பூரி ஜெகநாதரின் சிறந்த பக்தர் பிரதமர் மோடி என்றார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

  இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

  பா.ஜ.க.வுக்கு மிகவும் திமிர் பிடித்துவிட்டது, இவர்கள் தங்களை கடவுளாகக் கருதத் தொடங்கி உள்ளனர். பிரபஞ்சத்தின் கடவுளாகக் கருதப்படுபவர் பூரி ஜெகநாதர்.

  பூரி ஜெகநாதர் மோடிஜியின் பக்தர் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  மோடிஜி ஜெகநாதரை விட மேலானவரா? பா.ஜ.க. அவர்களின் ஆணவத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

  • 2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனி
  • இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனி. அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ரெடி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

  'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான 'டபுள் ஐஸ்மார்ட் ' படத்திற்காக நடிகர் ராம் பொதினேனி மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது திரைப்பெயரை உஸ்தாத் ராம் பொதினேனி மாற்றிக்கொண்டார்.

  இப்படத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி ஹீரோவாகவும், சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகுகிறது. இதற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

  இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளான நேற்று (மே 15) 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலியின் காட்சியமைப்புகள் அருமையாக வந்துள்ளது. 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மேலும், படம் குறித்தான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சார்மி.
  • இவர் தயாரிப்பில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

  தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சார்மி, தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.


  சார்மி

  இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதனால் அதிர்ச்சியான சார்மி சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

  லைகர் தோல்விக்கு காரணம் சார்மி என்றும் பூரி ஜெகந்நாத் டைரக்டராக இருந்தாலும் படத்தை சார்மிதான் இயக்கினார் என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பின. மேலும், லைகர் தோல்வியால் அடுத்த படமான ஜனகனமன படத்தை கைவிட்டு விட்டனர் என்றும் தகவல்கள் வெளியானது.


  சார்மி

  இதையடுத்து மீண்டும் இணைய பக்கத்தில் வந்து சார்மி வெளியிட்டுள்ள பதிவில், ''வதந்திகள்.. வதந்திகள்.. வதந்திகள்.. எல்லா வதந்திகளும் பொய்யானவை. பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனத்தை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வதந்திகளுக்கு இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

  ×