வதந்திகளுக்கு இரங்கல்.. நடிகை சார்மி ஆத்திரம்..

காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சார்மி.இவர் தயாரிப்பில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சார்மி
சார்மி
Published on

தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சார்மி, தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.

சார்மி

இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதனால் அதிர்ச்சியான சார்மி சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

லைகர் தோல்விக்கு காரணம் சார்மி என்றும் பூரி ஜெகந்நாத் டைரக்டராக இருந்தாலும் படத்தை சார்மிதான் இயக்கினார் என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பின. மேலும், லைகர் தோல்வியால் அடுத்த படமான ஜனகனமன படத்தை கைவிட்டு விட்டனர் என்றும் தகவல்கள் வெளியானது.

சார்மி

இதையடுத்து மீண்டும் இணைய பக்கத்தில் வந்து சார்மி வெளியிட்டுள்ள பதிவில், ''வதந்திகள்.. வதந்திகள்.. வதந்திகள்.. எல்லா வதந்திகளும் பொய்யானவை. பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனத்தை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வதந்திகளுக்கு இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com