'நாட்டு குத்தா இருந்தா ஸ்டெப்பா மார்'- டபுள் ஐஸ்மார்ட் டீசர்

2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனிஇந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'நாட்டு குத்தா இருந்தா ஸ்டெப்பா மார்'- டபுள் ஐஸ்மார்ட் டீசர்
Published on

2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனி. அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ரெடி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான 'டபுள் ஐஸ்மார்ட் ' படத்திற்காக நடிகர் ராம் பொதினேனி மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது திரைப்பெயரை உஸ்தாத் ராம் பொதினேனி மாற்றிக்கொண்டார்.

இப்படத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி ஹீரோவாகவும், சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகுகிறது. இதற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளான நேற்று (மே 15) 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலியின் காட்சியமைப்புகள் அருமையாக வந்துள்ளது. 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மேலும், படம் குறித்தான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com