பூரி ஜெகநாதரைவிட பிரதமர் மோடி மேலானவரா?: கெஜ்ரிவால் ஆவேசம்

பூரி ஜெகநாதர் பிரபஞ்சத்தின் கடவுளாகக் கருதப்படுபவர். மோடிஜி ஜெகநாதரை விட மேலானவரா என கேள்வி எழுப்பினார்.
பூரி ஜெகநாதரைவிட பிரதமர் மோடி மேலானவரா?: கெஜ்ரிவால் ஆவேசம்
Published on

டேராடூன்:

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பூரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என தெரிவித்தார். அதன்பின், சுதாரித்துக் கொண்ட அவர், பூரி ஜெகநாதரின் சிறந்த பக்தர் பிரதமர் மோடி என்றார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பா.ஜ.க.வுக்கு மிகவும் திமிர் பிடித்துவிட்டது, இவர்கள் தங்களை கடவுளாகக் கருதத் தொடங்கி உள்ளனர். பிரபஞ்சத்தின் கடவுளாகக் கருதப்படுபவர் பூரி ஜெகநாதர்.

பூரி ஜெகநாதர் மோடிஜியின் பக்தர் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோடிஜி ஜெகநாதரை விட மேலானவரா? பா.ஜ.க. அவர்களின் ஆணவத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com