என் மலர்
நீங்கள் தேடியது "Punjab CM Mann"
- ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்க நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பங்கேற்க உள்ளார்.
- "பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்" என்றார்.
சென்னை மயிலாப்பூரில் நாளை நடைபெறும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம், 3.05 லட்சம் மாணவர்கள் பயன் பெறவுள்ளனர்.
இத்தொடக்க விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக, அவர் இன்று மாலை சென்னை வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பகவந்த் மான் கூறுகையில்," பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
பஞ்சாப்பில் தற்போது மதிய உணவுத் திட்டம் உள்ளது. காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்" என்றார்.
- கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி.
- கெஜ்ரிவால் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டு நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது:-
நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்புவது சுதந்திரம் அல்ல. ஒன்றுபடுவோம் அல்லது நாடு நாசமாகிவிடும். கெஜ்ரிவால் பெரிய புரட்சியை கொண்டு வருவார்.
டெல்லி அரசு சட்டப்படி செயல்படும்.
அரசியல் பழிவாங்கலின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்ட முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எந்த சட்டமும் கூறவில்லை. அவர் அமலாக்கத்துறை காவலில் இருக்கிறார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. ஒவ்வொரு வேட்பாளரும் கெஜ்ரிவாலாக இருப்பார். ஒவ்வொரு தொண்டரும் கெஜ்ரிவாலாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






