என் மலர்

  நீங்கள் தேடியது "Plus Two exam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எஸ்.எஸ்.எல்.சி. தேறியவர்கள், பிளஸ்-2 தேர்வை தனித்தேர்வர்களாக நேரடியாக இனி எழுத முடியாது என்று அரசு தேர்வு இயக்குனர் அறிவித்து உள்ளார். #SSLC #Plustwo
  சென்னை:

  தமிழகத்தில் இதுவரையில் எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு எழுதி தேறியவர்கள், தனித்தேர்வர்களாக பிளஸ்-2 தேர்வை நேரடியாக எழுதலாம் என்ற நிலை இருந்து வந்தது.

  இப்போது கடந்த மார்ச் மாதம் முதல் பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்வை நேரடியாக எழுத முடியாது. இவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர்தான், பிளஸ்-2 தேர்வு எழுத முடியும்.

  நடைபெறவுள்ள செப்டம்பர் மாத பிளஸ்-2 தேர்விற்கு, இத்துறையால் நடத்தப்பட்ட பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தனித்தேர்வர்கள் தோல்வியுற்ற அல்லது வருகை புரியாத பாடங்களில் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கலாம். இவர்களுக்கு செப்டம்பர் 2018 தவிர்த்து, இன்னும் ஒரு வாய்ப்பு (2019 மார்ச்) மட்டும் தரப்படும்.

  இவர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று 27-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணத்துடன் ‘சிறப்பு அனுமதி திட்டத்தில்’ செப்டம்பர் மாதம் 3 மற்றும் 4-ந் தேதி ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  இந்த தகவல்கள், அரசு தேர்வு இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டு உள்ள அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.  #SSLC #Plustwo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பட்டுக்கோட்டையில் மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  பட்டுக்கோட்டை:

  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மகன் பிளஸ்-2 தேர்வில் 1005 மதிப்பெண் எடுத்ததை அறிந்து இனிப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது வீட்டில் இருந்த செல்போன் விளம்பரபோர்டு சாய்ந்து இருந்ததால் அதனை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து அடைக்கலத்தின் உடலை மீட்டனர். இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளன.
  சென்னை:

  கல்வி தரத்தில் நெல்லை மாவட்டம் எப்போதும் முன்னணியில் இருக்கும். ‘தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு’ என இதை பெருமையுடன் அழைப்பர். ஆனால் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது பின்னோக்கி சென்றுள்ளது.

  பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டம் 10-வது இடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 37,702 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 16,241 பேர் மாணவர்கள், 21,461 பேர் மாணவிகள்.

  312 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியவர்களில் 35,872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் நெல்லை மாவட்டம் 96,08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

  இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் குறைவு. இதனால் இம்மாவட்டம் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய 312 பள்ளிகளில் 119 பள்ளிகளில் மட்டுமே 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  கடந்த 2016-17-ம் கல்வி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த முறை 7-வது இடத்துக்கு பின்நோக்கி சென்று விட்டது.

  இந்த மாவட்டத்தை சேர்ந்த 20,923 பேர் (8,510 மாணவர்கள், 11,475 மாணவிகள்) தேர்வு எழுதினர். அவர்களில் 95.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டு பெற்ற தேர்ச்சி விகிதத்தை விட குறைவாகும். அதாவது கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் 96.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

  கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரிக்கு உண்டு. ஆனால், நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் 95.08 சதவீதம் பெற்றுள்ளது. இதனால் இம்மாவட்டம் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு 95.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் 24,398 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அவர்களில் 10,260 பேர் 58 அரசு பள்ளிகளில் படித்தவர்கள். அதில் 4 ஆதிதிராவிட நல பள்ளிகள் மற்றும் மலைவாழ் நல பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளும் அடங்குவர்.

  பிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் டாஸ்மாக்கை மூடக்கோரி தற்கொலை செய்துகொண்ட மாணவர் தினேஷ் பிளஸ்-2 தேர்வில் 1,024 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
  சங்கரன்கோவில்:

  நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் நல்லசிவம் (வயது 17). நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினேஷ் நல்லசிவம் பலமுறை சொல்லியும் அவர் திருந்தவில்லை. எனவே மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தாத தந்தையை கண்டித்தும், டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு நெல்லை ரெயில்வே மேம்பாலத்தில் கடந்த 2-ந் தேதி தினேஷ் நல்லசிவம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானதில் தினேஷ் நல்லசிவம் 1,200-க்கு 1,024 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்-194, ஆங்கிலம்-148, இயற்பியல்-186, வேதியியல்-173, உயிரியல்-129, கணிதம்-194.

  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாடசாமி, இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மகனை இழந்துவிட்டேனே என்று கூறி கதறி அழுதார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்ச்சி விகிதத்தில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தோம் என்று விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் தெரிவித்தார். #Plus2Result #HSCResult
  விருதுநகர்:

  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தேர்ச்சி சதவீதத்தில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  மாவட்டத்தில் 24 ஆயிரத்து 297 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 23 ஆயிரத்து 580 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  தேர்ச்சி சதவீதம் 97.05 ஆகும். இதன்மூலம் மாநிலத்திலேயே அதிக தேர்ச்சி கொண்ட முதல் மாவட்டம் என்ற பெருமையை விருதுநகர் பெற்றுள்ளது.

  விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 797 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 285 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.26 சதவீதமாகும்.

  இதேபோல் 13 ஆயிரத்து 500 மாணவிகள் தேர்வு எழுதியதில், 13 ஆயிரத்து 295 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.48 ஆகும்.  அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்திலும் விருதுநகர் மாவட்டமே முதலிடம் பெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 84 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மூலம் 8 ஆயிரத்து 153 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7 ஆயிரத்து 645 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.26 சதவீதமாகும்.

  விருதுநகர் மாவட்டம் கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 1985-ம் ஆண்டு முதல் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இடையில் 2 ஆண்டுகள் மட்டும் தவற விட்டோம். கடந்த ஆண்டு மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்தோம். அதனை இந்த ஆண்டும் தக்க வைப்பதற்காக மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்தோம். மெல்ல கற்கும் மாணவ-மாணவிகளுக்கு தனியாக கற்றுக்கொடுக்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு சிறப்பான கல்வியை வழங்க ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்த தனிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர், ஆசிரியைகளின் முறையான பயிற்சி, மாணவ-மாணவிகளின் ஈடுபாடு ஆகியவற்றால் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #Plus2Result #HSCResult

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகிற 16-ந் தேதி வெளியாகும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அரசு தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார். #Plus2examresults
  சென்னை:

  தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த கல்வி ஆண்டு வரை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு செய்யப்படும்.

  இதனால் மாணவர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள் என்று கருதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 16-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதியும் வெளியாகும் என்று முன்கூட்டியே அறிவித்து இருந்தார். அதன்படி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வருகிற 16-ந் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

  இதுகுறித்து அரசு தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  1998-ம் ஆண்டு வரை தேர்வு முடிவு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை அனுப்பி வந்தது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். அவற்றை மாணவர்கள் பார்த்து வந்தனர்.

  2003-ம் ஆண்டு முதல் அந்த நிலை மாற்றப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது.

  கடந்த ஆண்டு (2017) அரசு தேர்வுத்துறை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தேர்வில் ரேங்க் அடிப்படையும் கைவிடப்பட்டது. அதாவது யார் முதல் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மாணவர்களின் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது.

  இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. பள்ளிகள் வழங்கி உள்ள இணையதள முகவரியில் (இ.மெயில்) தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை பதிவேற்றம் செய்ய உள்ளது.

  மேலும், தேர்வுத்துறை அளிக்கும் முகவரியில் தேர்வு முடிவுகளை வருகிற 16-ந் தேதி அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காகிதம் இல்லா பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது. #Plus2examresults #ExamResult
  ×