search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high mark"

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய அனுமதி பெற்ற எஸ்.சி., எஸ்.டி. ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    • ரெயில்வே மேலாளர் முருகேசன் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய அனுமதி பெற்ற எஸ்.சி., எஸ்.டி. ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    அவர்களை கவுரவிக்கும் விதமாக பரிசு வழங்கும் நிகழ்ச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக சந்திப்பு ரெயில்வே மேலாளர் முருகேசன் கலந்துகொண்டு சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

    இதில் ஆட்டோ சங்க தலைவர் அஷ்ரப் அலி, செயலாளர் செல்வ பாஸ்கரன், நிர்வாகிகள் செல்வ மணிகண்டன், சண்முகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பட்டுக்கோட்டையில் மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மகன் பிளஸ்-2 தேர்வில் 1005 மதிப்பெண் எடுத்ததை அறிந்து இனிப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது வீட்டில் இருந்த செல்போன் விளம்பரபோர்டு சாய்ந்து இருந்ததால் அதனை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து அடைக்கலத்தின் உடலை மீட்டனர். இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×