என் மலர்
நீங்கள் தேடியது "Muslim Student Attack"
- பள்ளியில் ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய மாணவரை வேகமாக அடிக்குமாறு கூறுவது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வீடியோவில் உள்ள ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய மாணவரை வேகமாக அடிக்குமாறு கூறுவது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில், ஒரு மாணவர் நின்று கொண்டிருந்த இஸ்லாமிய மாணவரின் கன்னத்தில் அடித்து விட்டு செல்கிறார். அப்போது மேலும் 2 மாணவர்கள் அவரது கன்னத்தில் பின்புறத்தில் பளார் என அடிக்கின்றனர்.
ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்? வேகமாக அடியுங்கள் என ஆசிரியை சொல்வது போன்று வீடியோவில் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோவில் உள்ள ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது. அவர் நடந்த சம்பவத்திற்காக போலீசார் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த வீடியோ தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து பள்ளி போன்ற புனித இடத்தை நெருப்பின் சந்தையாக மாற்றுவது மோசமான செயல்.
இதை விட மோசமாக ஒரு ஆசிரியரால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அனைவரும் அன்பை கற்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
- மாணவனின் இடது கையில் 5 விரல்களும் வெட்டுபட்டு சிதைந்திருந்தது.
- நேற்று பகல் 10 மணிக்கு தொடங்கி 7 மணி நேரம் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.
அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பல் வெட்டியதில் மாணவனின் இடது கையில் 5 விரல்களும் வெட்டுபட்டு சிதைந்திருந்தது. மேலும் வலது கையில் 1 விரல் சிதைந்திருந்தது. அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்பட 7 சிறப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று பகல் 10 மணிக்கு தொடங்கி 7 மணி நேரம் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் துண்டான 5 விரல்களில் 4 விரல்கள் ஒட்ட வைக்கப்பட்டு விட்டது. மாணவன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும்போது 4 விரல்களோடு தான் வந்திருந்தார் என்பதால் அவற்றை ஒட்ட வைத்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வலது கையில் வெட்டுபட்ட 1 விரலும் ஒட்டவைக்கப்பட்டது. தற்போது வரை மாணவன் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பதாவும், அவன் நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.






