search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mithun Chakraborty"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
    • கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

    கடந்த 1976-ம் ஆண்டு பெங்காலியில் வெளியான 'மிரிகயா' என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று திரும்பி பார்க்க வைத்தார். இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'யாகாவா ராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.



    மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாகவும் மிதுன் சக்கரவர்த்தி இருந்து வந்துள்ளார். பின்னர், சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கினார். அதை தொடர்ந்து எம்.பி- பதவியை மிதுன் சக்கரவர்த்தி ராஜினாமா செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.


    இந்நிலையில் இன்று காலை கடுமையான நெஞ்சுவலி காரணமாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நரம்பியல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கடந்த மாதம் குடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

    • மாடலாக இருந்து நடிகையான அவர் இப்பட வெற்றிக்கு பிறகு ரசிகர்களின் கனவுக்கன்னியானார்
    • ரசிகர் பட்டாளம் இருந்தும் படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்

    முன்னணி இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்களின் திரைப்படங்கள், ரூ.100 கோடி வசூல் இலக்கை தொட்டால்தான் அதை வெற்றி படமாக இன்னாளில் கருதுகிறார்கள்.

    இந்தி திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய கதாநாயகர்களின் படங்களும் ரூ.100 கோடி வசூலை எட்டுவது சாதாரணமாகி விட்டது.

    கதாநாயகர்கள் மட்டுமின்றி மாதுரி தீஷித், ஸ்ரீதேவி, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் உள்ளிட்ட பலர் கதாநாயகியாக நடித்த இந்தி திரைப்படங்கள் ரூ.100 கோடி இலக்கை எட்டியுள்ளன.

    ஆனால், பாலிவுட்டில் (இந்தி திரையுலகம்) முதல் முதலாக ரூ.100 கோடி வசூலை அள்ளி குவித்த வெற்றி பட கதாநாயகி இவர்களில் எவரும் அல்ல; கதாநாயகனும் 3 "கான்"களில் ஒருவர் அல்ல.

    1982ல் பப்பார் சுபாஷ் (Babbar Subhash) இயக்கத்தில் வெளியான இந்தி திரைப்படம் டிஸ்கோ டான்சர் (Disco Dancer). இதில் கதாநாயகனாக மிதுன் சக்ரபொர்த்தியும் (மிதுன் Chakraborty) கதாநாயகியாக கிம் யஷ்பால் (Kim Yashpal) எனும் பிரபல மாடல் ஒருவரும் நடித்திருந்தனர்.


    ஆடல், பாடல் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் 8 பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. மேலும், அரங்குகள் நிறைந்த காட்சிகளாக இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

    மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, ரஷியா, சினா, அரபு நாடுகள், துருக்கி, ஆப்பிரிக்க நாடுகள் என திரையிட்ட இடங்களிலெல்லாம், டிஸ்கோ டான்சர், வெற்றி வாகை சூடியது.

    ஒரு இந்தி திரைப்படம் வசூலில் ரூ.100 கோடிக்கும் மேல் முதல் முதலாக தொட்டது தயாரிப்பாளர்களே எதிர்பாராத ஒரு ஆச்சரியம்.

    மிதுனுக்காக பெண் ரசிகைகளும், கிம் யஷ்பாலிற்காக ஆண் ரசிகர்களும் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தனர்.


    பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக கிம் வலம் வந்தார்.

    டிஸ்கோ டான்சர் வெற்றிக்கு பிறகு கிம்மிற்கென பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தும் படிப்படியே திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார் கிம்.

    கிம்மின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல்கள் இல்லை.

    1985ல், ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து, தமிழில் "பாடும் வானம்பாடி" எனும் பெயரில் டிஸ்கோ டான்சர் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    பிரபல இந்தி திரைப்பட நடிகர் மிதுன் சக்கரவத்தியின் மகன் மீது முன்னாள் காதலி பாலியல் புகார் கொடுத்து இருந்த நிலையில் நிச்சயிக்கப்பட்ட நடிகையுடன் ரகசியமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    இந்தி சினிமா உலகில் கடந்த 1980-ம் ஆண்டுகளில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் சினிமா துறையில் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களையும் நடத்தி வருகிறார்.

    நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் மகாச்சே, நடிகை மடால்ஷா ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தை கடந்த 7-ந் தேதி ஊட்டியில் நடத்த மிதுன் சக்கரவர்த்தி திட்டமிட்டு இருந்த நிலையில் மகாக்சே மீது அவரது முன்னாள் காதலி டெல்லி போலீசில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதில் மகாக்சேதன்னை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் கூறி இருந்தார்.

    இதனால் கடந்த 7-ந்தேதி நடைபெற இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மகாக்சே தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் முன் ஜாமீன் கிடைத்தது.

    இந்த நிலையில், ஊட்டியில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட்டில் மகாக்சே- மடால்ஷா திருமணம் நேற்று ரகசியமாக நடைபெற்றது.

    அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே உள்ள இந்த ரிசார்ட்டில் திருமணம் நடந்ததால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. நேற்று மாலை தான் இந்த ரகசிய திருமணம் குறித்த தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து மகாக்சே- மடால்ஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியானது.
    ஊட்டியில் இன்று நடைபெற இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. போலீசார் கைதுக்கு பயந்து திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. #MahaAkshay #MithunChakraborty
    ஊட்டியில் இன்று நடைபெற இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மணமகன் தலைமறைவாகி விட்டார்.

    பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவரது மகன் மஹா அக்‌ஷய். இவர் மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறார். அவரை மிதுன் சக்கரவர்த்தி குடும்பத்தினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பெண் குடும்பத்தினர் டெல்லி சென்று குடியேறி விட்டனர். இந்த நிலையில் டெல்லி சென்றும் அந்த பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அந்த பெண் டெல்லி போலீசில் புகார் செய்து இருந்தார். அதனைத் தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி மகனை போலீசார் தேடி வந்தனர்.



    மிதுன் சக்கரவர்த்தி மகன் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    எப்படியும் முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் மிதுன் சக்கரவர்த்தி மகன் மஹா அக்‌ஷய்க்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    ஊட்டியில் இன்று இந்த திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மிதுன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் பங்களா மற்றும் தோட்டங்கள் உள்ளது. இதனால் இங்கு வைத்து திருமணத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மிதுன் சக்கரவர்த்தி மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நீங்கள் டெல்லி நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதனால் கைது செய்யப்படுவோம் என நினைத்த மஹா அக்‌ஷய் தலைமறைவாகி விட்டார். அவருக்கு இன்று ஊட்டியில் நடைபெற இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டது. #MahaAkshay #MithunChakraborty

    நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #MahaAkshay #MithunChakraborty
    முன்னாள் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

    இவரது மகன் மஹா அக்‌ஷய். இவரும் நடிகர் ஆவார். இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடிக்கிறார்.

    இந்த நிலையில் மஹா அக்‌ஷய் மீது மும்பையை சேர்ந்த போஜ்பூரி நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    திருமணம் செய்வதாக கூறி மஹா அக்‌ஷய் என்னை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இதை தொடர்ந்து மாத்திரைகள் கொடுத்து கருவை கலைக்க வற்புறுத்தினார். இதை அறிந்த மஹா அக்‌ஷயின் தாயாரும், முன்னாள் நடிகையுமான யோசிதா பாபி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனுவை டெல்லி தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரட் ஏக்தா கவுபா விசாரித்தார்.

    இதுதொடர்பாக நடிகர் மஹா அக்‌ஷய், அவரது தாயார் யோசிதா பாலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். #MahaAkshay #MithunChakraborty

    ×