என் மலர்
சினிமா

நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் மீது வழக்கு
நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்ஷய் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #MahaAkshay #MithunChakraborty
முன்னாள் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
இவரது மகன் மஹா அக்ஷய். இவரும் நடிகர் ஆவார். இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடிக்கிறார்.
இந்த நிலையில் மஹா அக்ஷய் மீது மும்பையை சேர்ந்த போஜ்பூரி நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருமணம் செய்வதாக கூறி மஹா அக்ஷய் என்னை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இதை தொடர்ந்து மாத்திரைகள் கொடுத்து கருவை கலைக்க வற்புறுத்தினார். இதை அறிந்த மஹா அக்ஷயின் தாயாரும், முன்னாள் நடிகையுமான யோசிதா பாபி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை டெல்லி தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரட் ஏக்தா கவுபா விசாரித்தார்.
இதுதொடர்பாக நடிகர் மஹா அக்ஷய், அவரது தாயார் யோசிதா பாலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். #MahaAkshay #MithunChakraborty
Next Story






