search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mannar Mannan"

    குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் உள்பட 6 பேர் சிக்கி உள்ள நிலையில் சி.பி.ஐ. மீண்டும் அதிரடி விசாரணை நடத்தி வருவதால் போலீஸ் அதிகாரிகளும் கைது ஆகலாம் என தெரிகிறது. #GutkhaScam #CBI

    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா வியாபாரி மாதவராவ் உள்பட 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

    செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோன் உரிமையாளரான மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான செந்தில் முருகன் ஆகியோர் கடந்த 6-ந்தேதி கைதானார்கள். இவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர்.

    செங்குன்றம் குட்கா குடோனில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குட்கா தயாரிக்க பயன் படுத்தப்பட்ட எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளான டி,ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், மற்றும் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இவர்களில் மன்னர்மன்னன் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் சம்பத் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதோடு குட்கா விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாகவே கூறப்பட்டது.

    இந்த நிலையில் குட்கா வழக்கில் சி.பி.ஐ. தனது அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது. உணவு பாதுகாப்பு துறையில் திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளராக இருக்கும் சிவக்குமார், நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இவர்தான் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    ஆனால் அதனை ஏற்க கோர்ட்டு மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் அதிகாரி சிவகுமாரை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்ய சி.பி.ஐ. மீண்டும் வேகம் காட்டுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குட்கா ஊழலை பொறுத்தவரையில் குடோன் உரிமையாளரான மாதவ ராவ் மற்றும் அவரது கூட்டாளிகள், இருவருடன் அரசு அதிகாரிகள் 3 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் இதுவரையில் யார் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் அடுத்த குறி போலீஸ் அதிகாரிகள்தான் என்றும், விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குட்கா விவகாரத்தில் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னனிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை.

    எனவே விரைவில் அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளுடனான தொடர்பு பற்றி இறுதியாக தெரிய வரும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் நம்புகிறார்கள். உதவி ஆணையரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளும் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. #GutkhaScam #CBI

    குட்கா ஊழலை கண்டித்து தஞ்சையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #DMK #GutkhaScam

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு பதவி விலகக்கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

    தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தங்கினார்.

    இதில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் பணிக் குழுத் தலைவர் எல்.கணேசன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, ஒரத்தநாடு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், சட்டத் திருத்த குழு உறுப்பினர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, பாக்கியவதி தாண்டவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், பி.ஜி.ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், தி.க. மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாதுஷா, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #GutkhaScam

    குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ், சீனிவாசராவுக்கு மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#Gutkhascam #GutkhaCBIProbe

    சென்னை:

    தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது. ஆனால், இந்த தடையை மீறி மாதவ ராவ், சீனிவாசராவ் ஆகியோர் குட்காவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தனர்.

    இதற்காக அவர்கள், தமிழக அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.


    பின்னர், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர், அரசு அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், இவர்களை சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி ஆஜர்படுத்தி, 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றனர்.

    இந்த நிலையில், விசாரணையை முடித்து, 5 பேரையும் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். அவர்கள் அனைவரையும் வருகிற 20-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். இதன் பின்னர், சி.பி.ஐ. போலீசார், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘மாதவ ராவ், சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத், இருவரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். 17-ந் தேதி மாலையில் 4 மணிக்கு அவர்கள் இருவரையும் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #Gutkhascam #GutkhaCBIProbe

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று தங்கதமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். #ThangaTamilselvan #AMMK #GutkhaScam

    கொடைக்கானல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கொடைக்கானல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் மிகுந்த வெறுப்படைந்துள்ளனர். தமிழக அரசுக்கு மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. இரட்டை இலை சின்னம் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆனால் குட்கா ஊழலில் ரூ.150 கோடி வரை அமைச்சர், காவல் துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது உண்மை என தெரிய வந்துள்ளது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரை இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.

    மக்களால் ஓரம் கட்டப்பட்ட முதல்- அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தங்களை மிகப் பெரிய தலைவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் புதிதாக ஒரு தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற வில்லை. இது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    முதல்-அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் இன்னும் மனதளவில் இணையவில்லை. விரைவில் தமிழகத்துக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் எந்த சின்னம் கிடைத்தாலும். அதில் வெற்றி பெறுவோம். நாங்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெறா விட்டால் அ.ம.மு.க.வை கலைத்து விட்டு அ.தி.மு.க.வுடன் இணைந்து விடுகிறோம். இது நடக்காது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பது உறுதி.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கூடி விரைவில் தீர்ப்பு வர உள்ளதால் மிகப் பெரிய அரசியல் மாற்றம் உருவாகும்.

    தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சினை மீண்டும் தலை தூக்கி வருகிறது. மின் வெட்டு உள்ளது என்று சொல்வதற்கு ஒரு அமைச்சர் எதற்கு? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் கவர்னர் தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #AMMK #GutkhaScam

    பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #MannarMannan
    புதுச்சேரி:

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 90 வயது நிரம்பிய இவர் முதுமை சார்ந்த நோய்களால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இன்று அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



    தமிழறிஞரான மன்னர் மன்னன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் பணியாற்றிய காலத்தில், தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் பல புதுமையான நாடகங்களை வழங்கியிருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தமிழ்ப்பணியை கவுரவிக்கும் வகையில் புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. #MannarMannan 
    ×