என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabisekam"

    • கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.
    • குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம்.

    மதுரை:

    தென்காசி ரெயில் நகரை சேர்ந்த நம்பிராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இதற்காக புண்ணிய தலமான காசியில் இருந்து புனித நீர் வரவழைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய தொல்லியல்துறை மேற் பார்வையில் இந்த கோவில் உள்ளது.

    இந்தநிலையில் கோவிலின் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023-ம் ஆண்டு ஆலோசனை நடத்தப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.

    குறிப்பாக, கோவிலின் தூண்களை சீரமைக்கவில்லை. ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவு சரிசெய்யப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது.

    கோவிலை புனரமைக்க ஒதுக்கிய நிதி முறைகேடு செய்யப்பட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதற்கிடையே வருகிற 7-ந்தேதி அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர் நியமிக்க வேண்டும். அரசு நிதியை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட், புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர், ஐ.ஐ.டி. குழுவி னரை நியமித்தும், அதுவரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. கோவில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. எனவே இதில் ஆய்வு செய்ய தேவையில்லை. குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம். கணபதி ஹோமம் முடிந்த பின்னர் குடமுழுக்கை நிறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கம் செய்ய வேண்டும் என வாதாடினார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

    காலை 7-30மணிக்கு விமான கும்பாபிஷேகம், விநாயகர் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ காமாட்சியம்மன் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    அவினாசி அருகே சொக்கனூரில் அமைந்துள்ள செங்குந்தர்களின் குல தெய்வமான தேவி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று 1 -ந்தேதி கணபதியாகம், நவகிரகஹோமம், கோபூஜை, தீர்த்தம் எடுக்க ஆற்றுக்கு செல்லுதல், விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி, திருமண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், காப்பு அணிவித்தல், கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம்,திரவ்யாகம், முதற்கால யாகபூஜை, தீபாரதனை ஆகியவை நடைபெற்றன.

    இன்று காலை சிவாச்சரியார் வழிபாடு, இரண்டாம் கால யாகபூஜை, திரவ்ய யாகம், 3-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. இரவு 10மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    நாளை 3ந்தேதி கும்பாபிஷேகத்தையொட்டி காலை 5மணிக்கு யாகசாலை பூஜை துவக்கம், திரவியயாகம், நான்காம் கால பூஜை, நாடிசந்தானம், மஹாபூர்ணஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நடக்கிறது.

    காலை 7-30மணிக்கு விமான கும்பாபிஷேகம், விநாயகர் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ காமாட்சியம்மன் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையடுத்து காலை 10மணிக்கு மேல் தசதரிசனம், மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை ,பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை நாட்டாமைக்காரர் கந்தசாமி, பெரிய தனக்காரர் கொண்டப்பன், நிர்வாக குழு தலைவர் ரமேஷ் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    கும்பாபிஷேகம் மகா சந்நிதானம் வேதசிவாகம சிரோன்மணி ஸ்ரீலஸ்ரீ ராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் சண்முக சிவாச்சாரியார் சுவாமிகள், ஐராவதீஸ்வரர் சிவம் ஆகியோரின் சர்வசாதக சிறப்போடு நடைபெற உள்ளது.

    • முதற்கால யாக வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரோளி வழிபாடு உட்பட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
    • காலை 8மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே அணிக்கடவில் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் கருவறை, முன்மண்டபம், தளவரிசை, திருமதில் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பணிகள் நிறைவு பெற்று இன்று கும்பாபிேஷக விழா துவங்குகிறது.

    இன்று மாலை3 மணிக்கு, முளைப்பாலிகை, தீர்த்தம் எடுத்து வருதல், வெள்ளை விநாயகர் மூர்த்தி கோவிலுக்கு, அரச மரத்தில் இருந்து கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.மாலை 5:30 மணிக்கு மங்கள இசை, புனித நீர், புற்று மண் எடுத்தல், நிலத்தேவர் வழிபாடு, திருமகள், முளைப்பாலிகை இடுதல், காப்பு அணிவித்தல் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.மாலை 6:30 மணிக்கு திருக்குடங்கள் யாக சாலைக்கு எழுந்தருளச்செய்தல், முதற்கால யாக வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரோளி வழிபாடு உட்பட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    நாளை 18-ந் தேதி காலை, 5:30 மணிக்குதிருப்பள்ளி எழுச்சி, காலை 7 மணிக்கு நினைவு திருமஞ்சனம், காலை, 9மணிக்குஇரண்டாம் கால யாக பூஜை, திருமறை தொடக்கம், பேரோளி வழிபாடு நடக்கிறது. 19-ந்தேதி, காலை, 4:30 மணிக்கு நான்காம் கால வேள்வி, காலை, 6:30 மணிக்கு திருக்குடங்கள் யாக சாலை, திருக்கோவில் வலம் வருதல், காலை 7 மணிக்கு வெள்ளை விநாயகர் கும்பாபிேஷகம் நடக்கிறது.காலை 8மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • நாளை 13-ந்தேதி அதிகாலை, 3:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடக்கிறது.
    • ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் தாலுகா சாமராயபட்டியில், பழமையான விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, மகா கும்பாபிேஷக விழா மங்கள இசை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது. நேற்றுமாலை6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கும்ப ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் முதற்கால யாக பூஜை நடந்தது.

    இன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 11மணிக்குவிமான கலசம் வைத்தல், மதியம்2 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிநடைபெற்றது. மாலை,4மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை 13-ந்தேதி அதிகாலை, 3:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடக்கிறது.

    காலை 5 மணிக்கு மேல் 5:30 மணிக்குள், விமானங்கள் சம கால கும்பாபிேஷகமும், 5:30 முதல் 6 மணிக்குள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, தச தானம், தச தரிசனம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. கும்பாபிேஷக விழாவையொட்டி இன்று மாலை முதல், நாளை மாலை வரை தொடர் அன்னதானம் நடக்கிறது.

    • செங்கோட்டையில் மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது.
    • ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மேலுார் கதிரவன் காலனியில் இந்துகாட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது.

    விழாவில் விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, நான்காம் யாகசாலை பூஜை, நாடிசந்தானம், கடம் புறப்பாடு, கோபுரம் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் மஹாகும்பாபிஷேகம், மஹாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    பகல் 12மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் இந்து காட்டுநாயக்கன் சமுதாய பெரியவர்கள், இளைஞரணி நிர்வாகிகள் பக்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

    நிகழச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

    ×