செங்கோட்டையில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செங்கோட்டையில் மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கும்பாபிஷேகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
கும்பாபிஷேகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை மேலுார் கதிரவன் காலனியில் இந்துகாட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவில் விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, நான்காம் யாகசாலை பூஜை, நாடிசந்தானம், கடம் புறப்பாடு, கோபுரம் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் மஹாகும்பாபிஷேகம், மஹாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

பகல் 12மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் இந்து காட்டுநாயக்கன் சமுதாய பெரியவர்கள், இளைஞரணி நிர்வாகிகள் பக்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

நிகழச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com