search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karur accident"

    • விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேலம் பைபாஸ் சாலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு வந்து கொண்டிருந்த ஜீப் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முட்டை வாகனத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் அருகே இன்று அதிகாலை மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் தொழிற்பேட்டை அண்ணாநகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 27). இவர் தமிழக காவல்துறையில் அதிரடிப்படை போலீஸ்காரராக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர், இன்று அதிகாலை கரூர் நெரூரில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஒத்தக்கடை அருகே செல்லும் போது எதிரே மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மதன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மதன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் கரூர் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதன்ராஜ் தமிழ்நாடு இளைஞர்காவல் படை மூலம் வாங்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் தமிழக காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கரூர் அருகே விபத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கிய சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #MinisterVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம் ரெங்கநாதன்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றார். க.பரமத்தி அருகே சென்றபோது, தென்னிலை பகுதியில் உள்ள குவாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது.

    இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரி, அமைச்சர் காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் காரின் முன்பக்க விளக்குகள் உடைந்து சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

    இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் வரை அதே காரில் சென்று அங்கிருந்து வேறொரு காரில் பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை ஓட்டி வந்தது தஞ்சையை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது. மதுபோதையில் அவர் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 23-ந்தேதி நடந்த கார் விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி., ராஜேந்திரன் இறந்தார். மறுநாள் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.பி. காமராஜ் கார் விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பினார். இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விபத்தில் சிக்கியது அ.தி.மு.க. கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #MinisterVijayabaskar
    கரூர் அருகே இன்று காலை பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் வாங்கல் சங்கரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பரணிதா(வயது5), மகன் பிரவீன் (2). பரணிதா அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறாள்.

    வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பரணிதா தினமும் பள்ளி பஸ்சில் ஏறி செல்வது வழக்கம். அப்போது பரணிதாவை அவரது தாய் விட்டு செல்வார். அது போல் இன்று காலை பள்ளி பஸ்சில் ஏற்றி விடுவதற்காக பரணிதாவை அவரது தாய் அழைத்து சென்றார்.

    பள்ளி பஸ் வந்ததும் மகளை ஏற்றி விட்டு வீட்டிற்கு திரும்பினார். அதற்கு முன்பு பிரவீன், தனது தாயின் பின்னால் ஓடியுள்ளான். இதனை யாரும் கவனிக்கவில்லை.

    இந்தநிலையில் பரணிதாவை ஏற்றி விட்டு திரும்பும் போது, அங்கு வந்த பிரவீன் பஸ் முன்பு சென்றுவிட்டான். டிரைவர் இதை கவனிக்காமல் பஸ்சை இயக்கவே, முன்பக்க சக்கரத்தில் சிக்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதைப்பார்த்த அவனது தாய் கதறி துடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர் அருகே இன்று வாகனம் மோதி தம்பதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் சுக்கா லியூரை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை 4 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வேலாயுதம்பாளையத்தில் உள்ள உறவினர்களை பார்க்க சென்றனர்.

    கரூர்-சேலம் தேசியநெடுஞ் சாலையில் மூலிமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே செல்லும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார். விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×